வீடே மணமணக்கும் சுவையில் சிக்கன் லாலிபாப்... ஒரு முறை சிக்கன் லாலிபாப் இப்படி செய்து பாருங்கள்...

வீடே மணமணக்கும் சுவையில் சிக்கன் லாலிபாப்... ஒரு முறை சிக்கன் லாலிபாப் இப்படி செய்து பாருங்கள்...



Hotel style chicken lollipop recipe

இன்று பெரும்பாலான மக்கள் அசைவ உணவில் சிக்கனை தான் அதிகம் விரும்பி சாப்பிட்டு வருகின்றனர். அதிலும் சிறு குழந்தைகள் சொல்லவே வேண்டாம். விதவிதமான முறையில் சமைக்கப்படும் சிக்கனுக்கு என்றே தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளது.

அப்படியாக குழந்தைகள் விரும்பி சாப்பிடும் சிக்கனில் ஒன்று தான் சிக்கன் லாலிபாப். இதனை சுவையான முறையில் ஹோட்டல் ஸ்டைலில் வீட்டிலேயே செய்வது எப்படி என்று இங்கு பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:
சிக்கன் லாலிபாப் துண்டுகள் - 8
முட்டை - 1
இஞ்சி பூண்டு விழுது - 2 டீஸ்பூன்
மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன்
எலுமிச்சை சாறு - ஒரு டீஸ்பூன்
தயிர் - 50 மில்லி
சோள மாவு - ஒரு டேபிள் ஸ்பூன்
ஃபுட் கலர் - விரும்பினால் ஒரு சிட்டிகை சேர்த்துக் கொள்ளவும்.

Chicken lollipop

முதலில் சிக்கன் லாலிபாப் துண்டுகளை நன்கு கழுவி சுத்தம் செய்து கொள்ளவும். பின் பாத்திரம் ஒன்றில் முட்டை, இஞ்சி பூண்டு விழுது, மிளகு மற்றும் மிளகாய் தூள், எலுமிச்சை சாறு, தயிர், சோள மாவு, உப்பு, புட் கலர் என அனைத்தையும் சேர்த்து நன்கு கலக்கவும்.

இந்த மசாலா கலவையில் சுத்தம் செய்து வைத்திருக்கும் லாலி பாப் துண்டுகளை சேர்த்து நன்கு பிரட்டி அரை மணிநேரம் ஊற வைக்கவும். பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் சிக்கன் லாலிபாப் துண்டுகளை போட்டு பொரித்து எடுக்கவும். சுவையான சிக்கன் லாலிபாப் தயார்.