ஒற்றை தலைவலியை ஓட ஓட விரட்ட இதை பண்ணுங்க.! பக்க விளைவுகள் நிறைந்த மாத்திரைகள் வேண்டாம்.!?Home remedies for migrane problems

பொதுவாக தலைவலியில் பலவகையான தலைவலிகள் உள்ளன. இதில் குறிப்பாக மைக்ரேன் என அழைக்கப்படும் ஒற்றை தலைவலி மிகவும் கொடுமையான தலைவலியாக இருந்து வருகிறது. தலையில் யாரோ கடுமையாக அடிப்பது போன்ற உணர்வு தினமும் ஏற்படுவது இந்த மைக்ரேன் தலைவலியாகும். தலைவலியுடன் சேர்ந்து குமட்டல், மயக்கம், வாந்தி போன்றவைகளும் காணப்படுகிறது.

headache

பொதுவாக சாலைகளில் செல்லும்போது, அல்லது வீடுகளில் இருக்கும் போதோ அதிகமான சத்தத்தை கேட்டால் இந்த தலைவலி அதிகமாக ஏற்படும். உலகில் உள்ள மக்கள் தொகையில் 100 கோடி மக்கள் இந்த மைக்ரேன் தலைவலியால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று ஒரு ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. மூளையின் நரம்பியல் மண்டலத்தின் தொடர்பாக இந்த ஒற்றை தலைவலி இருந்து வருவதால் இதை குணப்படுத்துவது மிகவும் கடினம்.

இதற்காக பல ஆங்கில மருந்து, மாத்திரைகளை பலர் எடுத்து வருகின்றனர். ஆனால் இது உடலில் பல பக்க விளைவுகளை ஏற்படுத்துவதால் தலைவலியோடு பல உடல் நல பாதிப்புகளும் ஏற்படுகின்றது. இந்த ஒற்றை தலைவலியை தவிர்க்க ஒரு சில செயல்களின் மூலம் எளிதாக குணப்படுத்தலாம். இதைக் குறித்து பதிவில் விளக்கமாக பார்க்கலாம்.

headache

1. முளைகட்டிய தானியங்கள், மெக்னீசியம் நிறைந்த உணவுப் பொருட்கள், பச்சை காய்கறிகள், இஞ்சி, எலுமிச்சை, புதினா போன்றவை கலந்த மூலிகை டீ போன்றவற்றை அதிகமாக எடுத்துக் கொள்வதன் மூலம் தலைவலியை தவிர்க்கலாம்.

2. தேங்காய் எண்ணெய் மற்றும் கிராம்பு எண்ணையை சம அளவில் எடுத்துக்கொண்டு தலைவலியின் போது தலையில் தடவி வந்தால் ஒற்றைத் தலைவலி விரைவில் குணமடையும்.
3. ஒற்றை தலைவலியில் இருந்து  நிவாரணம் பெற அனுலோம்- விலோம் போன்ற பிராண யோகாசனங்களை செய்து வரலாம்.
4. பொதுவாக செரிமான மண்டலத்திற்கும், தலைவலிக்கும் குறிப்பிட்ட தொடர்புண்டு. எனவே செரிமான மண்டலத்தை சீராக வைத்துக் கொள்வதன் மூலம் ஒற்றை தலைவலி பிரச்சினை ஏற்படாமல் பாதுகாக்கலாம்.