எவ்வளவு பேர் இருந்தாலும் பாட்டியை மட்டும் விரட்டி விரட்டி கொத்தும் கோழி! திண்டாடும் பாட்டியின் வீடியோ!hen attack old women

தற்போதைய வாழ்க்கை முறையில் பல வினோதமான விஷயங்கள் நடந்து கொண்டேதான் இருக்கின்றது. இரண்டு வாரங்களுக்கு முன்பு சேலத்தில் சிறுத்தை ஒன்று வீட்டிற்குள் புகுந்து தூங்கிக்கொண்டிருந்த நாயை கவ்வியது. அதில் நாய் நூலிழையில் உயிர் தப்பித்தது. 

 அதேபோல் சமீபத்தில் பாம்பு ஒன்று டின் பீர் பாட்டிலுக்குள் தலையை விட்டு மாட்டிகொண்ட வீடியோவும் சமீபத்தில் வெளியாகி வைரல் ஆனது. அதேபோல் எலி ஒன்று முட்டை ஓட்டிற்குள் தலையை விட்டு திண்டாடும் வீடியோவும் வெளியானது. 

 விலங்குகளுக்கு தான் இப்படி நடக்கின்றது என பார்த்தால், மனிதர்களுக்கும் சில வித்தியாசமான சம்பவங்கள் நடைபெறுகிறது. அந்த வகையில் கோழி ஒன்று பாட்டியை விடாமல் துரத்துகிறது. அந்த இடத்தில் அதிகப்படியான நபர்கள் இருந்தாலும் அந்தக் கோழி அந்த பாட்டியை மட்டுமே குறிவைத்து கொத்துகின்றது.