சுட்டெரிக்கும் வெப்பத்தால் நமது உடல் ஆரோக்கியம் குறையாமல் வைத்துக்கொள்ள சில எளிய வழிகள்!

சுட்டெரிக்கும் வெப்பத்தால் நமது உடல் ஆரோக்கியம் குறையாமல் வைத்துக்கொள்ள சில எளிய வழிகள்!


healthy-tips-to-survive-in-summer

கோடையில் கொளுத்தும் அக்னி நட்சத்திர வெயிலின் வெப்பம் நம் தோல் மற்றும் உடல் உள்ளுறுப்புகளில் கூடப் பலவித மாற்றங்களை ஏற்படுத்துகின்றது. கடும் வறட்சி காரணமாக, தமிழகத்தில் இயல்பை விட வெப்ப நிலை அதிகரித்து வருகிறது. அதிகமான வெப்பத்தால் நமது உடல் வழக்கத்தை விட மிக விரைவில் பலவீனம் ஆகிவிடுகிறது. இதிலிருந்து நம் உடலை காத்துக்கொள்ள நாம் தான் சில தற்காப்பு செயல்களில் ஈடுபட வேண்டும்.

நீர்ச்சத்து:

healthy tips
கோடை காலத்தில் நமது உடலில் வியர்வை அதிகமாக வெளியேறிக்கொண்டே இருக்கும். எனவே உடலில் நீர்மச்சதை சீராக வைத்துக்கொள்ள நாம் அடிக்கடி நீர் ஆதாரங்களை பெருகிக்கொண்டே இருக்க வேண்டும். உடலில் நீரின் அளவு குறையும்பட்சத்தில் நீர்க்குத்து, எரிச்சல், சோர்வு என பல வகைகளில் நாம் சோதனைகளை சந்திக்க வேண்டியுள்ளது.எனவே நீர்ம உணவுகளான இளநீர், மோர், நுங்கு, பதநீர், சாத்துக்குடி, எலுமிச்சை, தர்பூசணி, கரும்பு போன்ற பழச்சாறுகளை அதிகமாக அருந்துவது சிறந்தது. அதிகமாக குளிரூட்டப்பட்ட செயற்கை குளிர்பானங்களை தவிர்ப்பது நல்லது.

வைரஸ் பாதிப்புகள்:

healthy tips
கோடைக் காலத்தில் ‘எபிடெமிக் கிளைமாடிக் இல்னெஸ்’ பலருக்கு ஏற்படும். இது உடலில் வெப்பத்தை அதிகரித்து கண் நோய், அம்மை போன்ற வைரஸ் நோய் பாதிப்புகளை ஏற்படுத்தும். இவை வராமல் பாதுகாக்க பழங்கள், நீர்சத்துள்ள காய்கறிகள், கீரை வகைகளை அதிகம் சாப்பிட வேண்டும்.

பருத்தி உடைகள்:

healthy tips
வெயில் காலத்துக்கு உகந்த உடைகள் என்றால் பருத்தி உடைகள் தான். பருத்தி ஆடைகளுக்கு வியர்வையை உறிஞ்சும் பண்பு உள்ளதால், வெளியில் செல்லும் போது பருத்தி ஆடைகளை உடுத்துங்கள். குறிப்பாக குழந்தைகளுக்கு கனமான உடைகளையே போலிஸ்டர் உடைகளையே உடுத்தாதீர்கள். இளைஞர்கள் ஜீன்ஸ் அணிவதை தவிர்ப்பது நல்லது.

உப்பு குறைபாடு:

healthy tips
சிட்ரஸ் பழங்களை அதிகம் சாப்பிடுங்கள். இதிலுள்ள வைட்டமின் சி சத்து சருமம் வறண்டு போகாமல் பாதுகாக்கும். புரதம் அதிகமுள்ள பால், முட்டையும் எடுத்துக் கொள்ளலாம். அதிகப்படியான வியர்வை வெளிவருவதால் உப்பு குறைபாடு ஏற்படாமல் இருக்க மோரில் உப்பு போட்டு அருந்துவது சிறப்பாக இருக்கும்.

தண்ணீர்:

healthy tips
எல்லாவற்றிற்கும் மேலாக நமது உடலை எப்போது சீராக வைக்க பயன்படுவது தண்ணீர் தான். பையில் எப்போதும் ஒரு பாட்டில் தண்ணீர் வைத்திருங்கள். முடிந்தால் அதில் எலுமிச்சை அல்லது சீரகம் போன்றவற்றை கலந்து அருந்தலாம். தண்ணீரை மிகவும் சூடாகவோ, அதிகமான கூலிங்கிலோ அருந்த வேண்டாம். அப்படி அருந்தினால் உங்களால் உடலுக்கு தேவையான அதிகமான நீரினை அருந்த முடியாது. எனவே சாதாரண தண்ணீரையே அதிகமா குடியுங்கள்.