"கிரீன் காபி தெரியுமா உங்களுக்கு?" அதில் இத்தனை நன்மைகள் இருக்கு!

"கிரீன் காபி தெரியுமா உங்களுக்கு?" அதில் இத்தனை நன்மைகள் இருக்கு!



Healthy benefits in green coffee

அனைவருக்கும் டீ அல்லது காபி இல்லாமல் நாளே விடியாது எனலாம். பலரும் ஆரோக்கியத்திற்காக பல்வேறு விதமான தேநீரைக் குடித்து வருகின்றனர். அதில் முக்கியமானது கிரீன் டீ. இது உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானதாக கருதப்படுகிறது. 

Coffee

க்ரீன் டீயைப் போலவே க்ரீன் காபி என்றும் ஒன்று உண்டு. இதில் காபின் அளவு மிகவும் குறைவாக உள்ளதோடு, ஆன்டி ஆக்சிடென்ட்கள் ஏராளமாக உள்ளதால், பல நோய்கள் வராமல் தடுக்க உதவுகிறது. பிளாக் காபியை விட க்ரீன் காபி தான் உடல் ஆரோக்கியத்திற்கு சிறந்தது என்று வல்லுநர்கள் கூறுகின்றனர்.

க்ரீன் காபி ரத்த அழுத்த நோயாளிகளுக்கும், சர்க்கரை நோயாளிகளுக்கும் மிகவும் நன்மை பயக்கக் கூடியதாகும். மேலும் இது உடலில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்கும். சோர்வாக இருப்பவர்கள் க்ரீன் காபி குடிப்பதால் உடலுக்கு உடனடி எனர்ஜி கிடைக்கிறது.

Coffee

மேலும் இது கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்தி இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. மேலும் இது சருமத்தை நீரேற்றமாக வைத்திருக்க உதவுகிறது. காபிக் கொட்டையில் இருந்து தயாரிக்கப்படும் பிளாக் காபியை விட க்ரீன் காபி சிறந்தது என்று வல்லுநர்கள் கூறுகின்றனர்.