சோம்பு நீரை குடிப்பதால் உடலுக்கு இவ்வளவு நன்மைகளா? வாங்க தெரிஞ்சுக்கலாம்.!
வீட்டின் சமையல் அறையில் முக்கிய பொருளாக பயன்படுவது சோம்பு. அதன்படி உடல் எடையை குறைப்பதற்கும், மாதவிடாய் பிரச்சினையை போக்குவதற்கும் சிறந்த மருந்தாக சோம்பு பயன்படுகிறது. எனவே, சோம்பை நீரில் ஊறவைத்து நீராக குடித்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பது குறித்து இந்த பதிவில் நாம் காணலாம்.
உடல் எடையை குறைக்க சோம்பு நீர் பயன்படுகிறது. ஏனென்றால் சோம்பில் உடலை சுத்தப்படுத்தும் மெட்டபாலிசத்தை அதிகரிக்கும் ஊட்ட சத்துக்கள் அதிக அளவில் நிறைந்துள்ளது. இதன் மூலம் வயிற்றை சுற்றியுள்ள தேவையற்ற கொழுப்புகள் குறைந்து நல்ல உடலமைப்பை பெறலாம்.

அதேபோல் சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு அதிகமாக பசி ஏற்படும். அதனை குறைப்பதற்கு பலரும் தேவையற்ற மாத்திரை மருந்துகளை சாப்பிடுகின்றனர். ஆனால் அதற்கு பதிலாக சோம்பு நீரை குடிப்பதால் பசியை அடக்கும் தன்மை உள்ளது.
மேலும் கல்லீரல் மற்றும் கணையத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் முக்கியமாக மெலடோனின் என்ற மூளையில் பிட்யூட்டரி சுரப்பியால் சுரக்கப்படும் ஹார்மோனை சீராக உற்பத்தி செய்து நல்ல நிம்மதியான தூக்கத்தை வர வைக்கிறது.

அதேபோல் காலையில் எழுந்தவுடன் டீ மற்றும் காபி குடிப்பதற்கு பதிலாக சோம்பு தண்ணீரை குடிப்பதால் மூளை நன்கு சுறுசுறுப்புடனும் புதுசுகளும் இருக்கும்.
குறிப்பாக பெண்களுக்கு ஏற்படும் நாள்பட்ட மாதவிடாய் பிரச்சனைகளை போக்கும் பண்புகளை சோம்பு தண்ணீரில் உள்ளது.