உடலுக்கு பல்வேறு சத்துக்களை அள்ளித் தரும் பீர்க்கங்காயின் நன்மைகள்!

உடலுக்கு பல்வேறு சத்துக்களை அள்ளித் தரும் பீர்க்கங்காயின் நன்மைகள்!


Health benefits of beerkangkai

பொதுவாக காய்கறிகளை சாப்பிடுவது உடலுக்கு பல்வேறு வகையான ஊட்டச்சத்துக்களை கொடுக்கிறது. அதிலும் ஒரு சில காய்கறிகளை தொடர்ந்து சாப்பிடுவது உடலுக்கு நல்ல சத்துக்களை கொடுக்கிறது. அதன்படி பீர்க்கங்காய் ஒரு சிறந்த ஊட்டச்சத்துக்களின் களஞ்சியமாக உள்ளது.

எனவே பீர்க்கங்காய் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பது குறித்து இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ளலாம். அந்த வகையில் பீர்க்கங்காயில் வைட்டமின்கள், தாதுக்கள், நார்ச்சத்து மற்றும் ஆன்டி ஆக்சிடென்ட்கள் அதிக அளவில் நிறைந்துள்ளது.

Beerkangkai

பீர்க்கங்காயில் அதிக அளவு நீர்ச்சத்து மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ளது. இது மலச்சிக்கலை போக்கி, செரிமானத்தை மேம்படுத்த உதவுகிறது. அதேபோல் பீர்க்கங்காயில் கலோரிகள் குறைவு மற்றும் நார்சத்து அதிக அளவில் உள்ளது.

குறிப்பாக பீர்க்கங்காயில் உள்ள ஃபைபர் ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது. மேலும் பீர்க்கங்காயில் இரும்பு சத்து அதிகமாக உள்ளதால் ரத்த சோகையை குறைக்க உதவுகிறது.

Beerkangkai

பீர்க்கங்காயில் வைட்டமின் சி அதிக அளவில் உள்ளது. இது நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. மேலும் பீர்க்கங்காயில் வைட்டமின் ஏ அதிகமாக இருப்பதால், கண் ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது.

பீர்க்கங்காயில் உள்ள பொட்டாசியம் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவுகிறது. இதில் உள்ள ஆன்டி ஆக்சிடென்ட்கள் புற்றுநோயை தடுக்க உதவுகிறது.