"நான் சாதிச்சு காட்டுறேன்" - நெப்போலியனின் மகன் தனுஷ் உறுதி.!
படுத்ததும் தூக்கம் வரலையா?? அப்போ இந்த டிப்ஸ் உங்களுக்குத்தான்..
மனிதன் ஒரு குறைந்தபட்சம் 8 மணி நேரம் உறங்குவது மிகவும் முக்கியம். அப்படி உறங்குவதன் மூலமே உடலின் சுழற்சி ஒரே சமநிலையில் இருக்கும். நமக்கும் ஆசை தான் சீக்கரம் தூங்கி சீக்கிரம் எழ வேண்டும் என்று. ஆனால் நம்மில் பலருக்கும் இருக்கும் பிரச்சனை படுத்ததும் உறக்கம் வராதது.
இந்த பிரச்னையை சரி செய்து, படுத்ததும் உறங்க கீழே கொடுக்கப்பட்டுள்ள சில வழிமுறைகளை பின்பற்றிப்பாருங்கள்.
சிலர் எண்களை நூறிலிருந்து தலைகீழாக எண்ணிக்கொண்டே வந்தால் தானாக தூக்கம் வரும் என சொல்வர்.
மாட்டுப் பால்
ஒரு டம்ளர் வெதுவெதுப்பான மாட்டுப் பால் இரவில் படுக்கும் முன்பு குடித்தால் சீக்கிரம் தூக்கம் வரும். ஏனெனில் அதில் மெலடோனின் மற்றும் ட்ரைப்டோபோஃன் என்ற ஹார்மோன்கள் அடங்கியுள்ளன. அதுவும் மாலையில் கறந்த பால் என்றால் இன்னும் பலன் அதிகமாக இருக்கும்.
வாழைப்பழம்
வாழைப்பழம் இயற்கையாகவே இரவில் சிறந்த தூக்கத்தை தரக் கூடியது. முதியோர்கள் அதிக இரத்த அழுத்தத்தால் தூக்கம் வராமல் தவிக்கும் போது வாழைப்பழங்களை சாப்பிட்டால் எளிதில் தூக்கம் வரும். அதுவும் மரபணு மாற்றப்பட்ட பழங்களை தவிர்த்து தினமும் வெவ்வேறு வகை பழங்களை சாப்பிடலாம்.
சீரகத்தண்ணீர்
தண்ணீரில் சிறிதளவு சீரகம் சேர்த்து கொதிக்கவைத்து, அதோடு கொஞ்சம் தேன் கலந்து இரவில் குடித்துவர தூக்கமின்மை பிரச்சனை தீரும்.
தயிர்
எப்போதும் காலையில் தயிர்சாதம் சாப்பிட்டால் அலுவலகத்தில்/ பள்ளியில் தூக்கம் அப்படி வரும். தூக்கமின்மை பிரச்சனை தீர தயிர் ஒரு நல்ல தீர்வாக உள்ளது. தினமும் உணவுடன் தயிரை உட்கொண்டு வந்தால் இரவில் உறக்கம் நன்றாக வரும்.
வெங்காயம்
வெங்காயத்தின் தோலை உரித்து அதில் சிறிதளவு உப்பு சேர்த்து அளவாக தண்ணீர் ஊற்றி வேக வைக்க வேண்டும். நன்றாக வெந்தவுடன் அந்த நீரை வடிகட்டி, வெங்காய தண்ணீரை எடுத்து இரவில் உண்ணும் சுடுசோற்றில் கலந்து சாப்பிட்டு வந்தால் தூக்கமின்மை குறையும்.
வேப்பிலை
வேப்பிலை இயற்கையாக அதிக நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது. வேப்ப மரத்தின் ஒவ்வொரு பாகமும் வெவ்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்தவை. வேப்பிலையை எடுத்து மிதமான சூட்டில் நன்கு வறுத்து அதை தலையில் வைத்து உறங்கினால் நன்றாக தூக்கம் வரும்.
சுரைக்காய்
சுரைக்காயை அரைத்து அதிலிருந்து சாறு எடுத்து அதே அளவிற்கு நல்லெண்ணெய் கலந்து இரவு உச்சந்தலையில் நன்றாக தேய்த்து வந்தால் தூக்கமின்மை குறையும்.