பலருக்கு உதாரணமாக மாறிய ஆடு..! மெய்சிலிர்க்க வைக்கும் குட்டி வைரல் வீடியோ..!Goat jump on lorry viral video

விடா முயற்சிக்கு உதாரணமாக ஆடு ஒன்று செய்துள்ள காரியம் வீடியோவாக இணையத்தில் வைரலாகிவருகிறது.

பொதுவாக வாழ்க்கையில் விடாமுயற்சி என்பது மிகவும் முக்கியமான ஒன்று. சாதாரண நிலையில் இருந்துகூட தங்களது விடாமுயற்சியால் புகழின் உச்சத்திற்கு சென்றவர்கள் ஏராளம். முயற்சியுடையார் இகழ்ச்சியடையார் என தமிழில் ஒரு பழமொழி சொல்வார்கள். முயன்றால் இந்த உலகில் முடியாதது எதுவுமே இல்லை.

இதற்கு உதாரணாக இந்த ஆடு செய்துள்ள காரியம் தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது. அந்த வீடியோவில் தண்ணீர் லாரி ஒன்று நின்றுகொண்டிருக்கிறது. அந்த லாரிக்கு மேலே இருந்த மரக்கிளையில் இருக்கும் இலைகளை சாப்பிட விரும்பிய ஆடு ஒன்று லாரியின் முன்பக்க கண்ணாடி வழியாக லாரியின் மேலே ஏற முற்சிக்கிறது.

ஆனால் ஆட்டின் முயற்சி தோல்வியடைந்ததை அடுத்து அந்த ஆடு தனது முயற்ச்சியை கைவிடாமல் மீண்டும் முயற்சிக்கிறது. ஓட்ட பந்தயத்திற்கு தயாராவதுபோல் ஓடிப்போய் லாரியில் ஏறி கம்பீரமாக போஸ் கொடுத்து நிற்கிறது. இந்த காட்சியை அந்தப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் சிலர் வீடியோவாக எடுக்க, அது இப்போது வைரல் ஆகிவருகிறது.