லைப் ஸ்டைல் 18 Plus

இதுபோன்ற ஆண்களை பெண்களுக்கு அறவே பிடிக்காதாம்! நீங்க அந்த லிஸ்ட்ல இருக்கீங்களா பாருங்க!

Summary:

Girls wont like this kind of persons anymore

பொதுவாக சில ஆண்களுக்கு அழகான, அன்பான மனைவி அமைவதை பார்த்திருப்போம் அதற்கு காரணாம் அந்த ஆண் அந்த பெண்ணை நடத்தும் விதம் அல்லது அவரிடம் பேசும், பழகும் விதம்தான்.

சிலவார்த்தைகளை பேசும் ஆண்களை பெண்களுக்கு அறவே பிடிக்காதாம். அவை என்னவென்று பாப்போம் வாங்க.

கெட்டவார்த்தை பேசுபவர்கள்

கெட்ட வார்த்தை பேசும் ஆண்களை கண்டாலே பெண்களுக்கு அறவே பிடிக்காதாம். அதற்கு காரணம் கெட்ட வார்த்தை பேசுவதை பெண்கள் கேவலமாக நினைக்கிறார்களாம். மேலும் சின்ன சின்ன சண்டை என்றால் கூட கெட்டவார்த்தை பேசுவார்கள் என்பதை அவர்கள் நம்புகிறார்கள். எனவே கெட்ட வார்த்தை பேசும் ஆண்களை பெண்களுக்கு பிடிக்காதாம்.

பல பெண்களுடன் தொடர்புடையவர்கள்

பல பெண்களுடன் தொடர்பில் உள்ள ஆண்களை பெண்களுக்கு பிடிக்காதாம். அத்தகைய ஆண்கள் தங்கள் தேவைகளுக்காகவும், தனது செக்ஸ் ஆசையை தீர்த்துக்கொள்ளத்தான் அவர்கள் பலரிடம் பேசுவதாக பெண்கள் நினைக்கிறார்களாம்.

ஆணாதிக்கவாதிகள்

ஆண்கள்தான் பெரியவர்கள், பெண்கள் தங்களிடம் அடங்கி போகவேண்டும் என்று நினைக்கும் ஆண்களை கண்டாலே பெண்கள் தெறித்து ஓடுகிறார்களாம்.

குடிகாரர்கள்

பெண்களுக்கு குடிகாரர்களை பிடிக்காது. எப்போதாவது குடிப்பவர்களை ஏற்றுக்கொள்வார்கள் ஆனால் தினமும் குடித்தால், அத்தகையவர்களுடன் வாழ்நாள் முழுவதும் சந்தோஷமாக வாழ முடியாது என்று பெண்கள் கருதுவதால் தினமும் குடிப்பவர்களை பிடிக்காது

சுயநலவாதி

பொதுவாக சுயநலவாதிகளை யாருக்குமே பிடிப்பதில்லை. அதிலும் பொதுவாக பெண்களுக்கு சுயநலவாதிகளை அறவே பிடிக்காதாம். இத்தகைய ஆண்கள் எப்போதும் தன்னைப்பற்றியே அதிகம் யோசிப்பார்கள், காதலுக்கு முக்கியத்துவம் தரமாட்டார்கள் என பெண்கள் நினைக்கிறார்களாம்.

சந்தேகம்

சந்தேகம் என்பது ஒரு தீராத வியாதி. இதுபோன்று அதிகம் சந்தேகப்படும் ஆண்களை பெண்கள் நெருங்குவதுகூட இல்லையாம்.

ரொமான்ஸ் இல்லாதவர்கள்

பெண்களுக்கு ரொமான்ஸ் என்றால் மிகவும் பிடிக்கும். ஆனால் காதல் செய்யும் ஆணிடம் ரொமான்ஸ் இல்லாவிட்டால், பின் அதுவே இருவருக்கிடையே சண்டைகளை ஏற்படுத்தி, பிரிவுகளை ஏற்படுத்திவிடும்.

கவனக்குறைவு

ஆண்கள் என்னதான் பெறுப்புணர்வு அதிகம் இருந்தாலும் பல நேரங்களில் கவனக்குறைவாக இருப்பது இயல்பு. இவாறு கவனக்குறைவாக இருக்கும் ஆண்களையும் பெண்களுக்கு பிடிப்பதில்லையாம்.

சோம்பேறித்தனம்

ஆண்களுள் எவர் மிகவும் சோம்பேறித்தனத்துடனும், எதிலும் ஒரு ஆர்வமின்றியும் இருக்கின்றார்களோ, அத்தகையவர்களால் பெண்களை சுத்தமாக ஈர்க்க முடியாது.


Advertisement