ஜீரண சக்தியை அதிகரிக்கும் இஞ்சி துவையல்... வீட்டிலேயே 10 நிமிடத்தில் செய்வது எப்படி?..!ginger-thuvaiyal-recipe-for-digestion

ஜீரண சக்தியை அதிகரிக்க சுவையான இஞ்சி துவையல் எவ்வாறு செய்வது என்பது பற்றி தற்போது காண்போம்.

ஜீரண சக்தியை அதிகரிப்பதற்காக இஞ்சியை உணவுடன் துவையலாக சேர்த்து உண்ணலாம். வயிற்று பிரச்சினைகளை சரிசெய்யவும் இஞ்சி மிகவும் நல்லது.

தேவையான பொருட்கள் :

நல்லெண்ணெய் - 1 தேக்கரண்டி
சிவப்பு மிளகாய் - 4 
உளுத்தம்பருப்பு - 1 தேக்கரண்டி
கருவேப்பிலை - சிறிதளவு
துருவிய தேங்காய் - கால் கப்
இஞ்சி - 100 கிராம்
வெல்லம் - சிறிதளவு
உப்பு - தேவைக்கேற்ப
புளி - 1 நெல்லிக்காய் அளவுinjiசெய்முறை :

★முதலில் இஞ்சியை தோல் நீக்கி, சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.

★பின் ஒரு கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் உளுத்தம் பருப்பு போட்டு வறுத்து, காய்ந்த மிளகாய், நறுக்கிய இஞ்சி, 1 துண்டு புளி ஆகியவற்றை சேர்த்து வதக்கி இறக்க வேண்டும்.

★அனைத்தும் நன்றாக ஆறியதும் மிக்ஸியில் சேர்த்து கறிவேப்பிலை சேர்த்து, தண்ணீர் இல்லாமல் அரைக்கவேண்டும்.

★அடுத்து அதில் வெல்லம், துருவிய தேங்காய் சேர்த்து மீண்டும் அரைக்கவும்.

★பின் துவையலுக்கு தேவைக்கேற்ப சிறிதளவு தண்ணீர் சேர்த்து, உப்பு சேர்த்து அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

★இறுதியாக நல்லெண்ணெய் சேர்த்து கடுகு, கருவேப்பிலை போட்டு தாளித்து துவையலில் ஊற்றினால் இஞ்சி துவையல் தயாராகிவிடும்.