அப்பா.. எனக்கு கொஞ்சம் கொடுப்பா.. குட்டிக்கு கரும்பை ஒடித்துக் கொடுத்த யானை.. கியூட் வீடியோ வைரல்.!

புவியில் வாழும் உயிரினங்களில் மனிதர்களை போல ஆக்ரோஷம், அமைதி குணம் என மனிதர்களின் குணநலனுடன் இயற்கையாகவே ஒன்றிப்போன விலங்கு யானை. காட்டில் வாழும் யானை ஆக்ரோஷத்துடன் செயல்படும் எந்றடாலும், அது சிந்தித்து சுயமாக செயல்படும் தன்மையை கொண்டது ஆகும்.
யானைக்கு கரும்புகள் என்றால் கொள்ளை பிரியம். அதனாலேயே உடுமலைப்பேட்டை மற்றும் தமிழ்நாடு - கேரளா, கர்நாடகா எல்லை பகுதி வழியாக செல்லும் லாரிகளை குறிவைத்து யானைகள் லாரியை மறித்து விரும்பி சாப்பிடும்.
இதையும் படிங்க: பாம்பு ஒருவரை கடிப்பது இப்படித்தான் நடக்குமா? பதறவைக்கும் வீடியோ.. செருப்புக்கே இந்த நிலையா?
Father shares sugar cane with his child pic.twitter.com/eCanbTK7aI
— Nature is Amazing ☘️ (@AMAZlNGNATURE) March 8, 2025
இந்நிலையில், பராமரிப்பில் இருக்கும் யானை ஒன்று, தனது தந்தையிடம் கரும்பு கேட்டது. அப்போது, தந்தை யானை கரும்பை தனது காலால் உடைத்து குழந்தைக்கு சாப்பிட கொடுத்தது. இதுதொடர்பான வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க: ருசியான பிரியாணி செய்ய ஆசையா? இல்லத்தரசிகளே தெரிஞ்சிக்கலாம் வாங்க.!