அட கொடுமையே! 2.4 கோடி ரூபாய் மதிப்புள்ள புது சொகுசு காரை பெட்ரோல் ஊற்றி கொளுத்திய உரிமையாளர்! என்ன காரணம் தெரியுமா?famous-youtuber-burned-costly-car-viral-video

2.5 கோடி ரூபாய் மதிப்புள்ள புது சொகுசு கார் ஒன்றை நபர் ஒருவர் பெட்ரோல் ஊற்றி கொளுத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரஷ்யா நாட்டை சேர்ந்தவர் லிட்வின். யூ ட்யூப் சேனல் ஒன்றை  நடத்திவரும் இவர் இணையவாசிகளிடையே மிகவும் பிரபலம். தனது யூ ட்யூப் சேனலில் 5 மில்லியன் சந்தாதாரர்களை வைத்துள்ளார். மேலும் இவர் வெளியிடும் பெரும்பாலான வீடியோக்கள் பல லட்சம் பார்வைகளை பெற்று வைரலாவதும் வழக்கம்.

இந்நிலையில் லிட்வின் சமீபத்தில் Mercedes-AMG GT 63 S என்ற சொகுசு கார் ஒன்றை 2 கோடியே 40 லட்சம் ரூபாய்க்கு வாங்கியுள்ளார். அவர் அந்த காரை வாங்கிய நாளில் இருந்து அந்த காரில் அடிக்கடி கோளாறு ஏற்பட்டுள்ளது. தனது காரை சரிசெய்து தருமாறு  லிட்வின் கார் டீலர்களிடம் 5 முறை காரை அனுப்பி வேலை பார்த்துள்ளார். அப்படி இருந்தும் கார் சரிவர வேலை செய்யவில்லை எனக்கூறப்படுகிறது.

viral video

இதனால் ஆத்திரம் அடைந்த லிட்வின் அந்த காரை பெட்ரோல் ஊற்றி எரிக்க முடிவு செய்துள்ளார். இதனை அடுத்து அந்த காரை சமவெளியில் நிறுத்தி பெட்ரோல் ஊற்றி கொளுத்தியுள்ளார். மேலும் அந்த காட்சிகளை வீடியோவாக பதிவு செய்து தனது யூ ட்யூப் சேனலில் பதிவு செய்துள்ளார் லிட்வின். தற்போது அந்த வீடியோ உலகம் முழுவதும் வைரலாகிவருகிறது.