இதை சாப்பிட்டா, உடனே தூக்கம் வரும்.. இப்போவே ட்ரை பண்ணுங்க.!



early sleeping foods

இரவு நேரத்தில் தூங்குவதற்கு முன்பாக எளிய உணவு பழக்கங்கள் நமக்கு விரைவான மற்றும் ஆழ்ந்த உறக்கத்தையும் தரும். அதுகுறித்து பார்க்கலாம் வாங்க.

சாமை கஞ்சி & கம்பு கஞ்சி : இவை இரண்டும் இயற்கையாகவே மெலட்டோனின் (Melatonin) மற்றும் மெக்னீசியம் (Magnesium) நிறைந்த தானியங்கள் ஆகும். இவை, மனதை அமைதியாக்கி உடலை சாந்தமாக்கும் தன்மை கொண்டவை. எனவே, உடல் விரைவில் தூக்கத்தை பெற இவை உதவுகின்றன.

தேன் : தேனில் உள்ள இயற்கை குளுகோஸ் (Glucose) மூளைச் செயல்பாட்டை தளரச்செய்து, தூக்க ஹார்மோனான மெலட்டோனின் சுரப்பை அதிகரிக்க உதவுகிறது.

இதையும் படிங்க: 10 கிலோ வரை எடை குறைய உதவும் நீர்.. எப்படி பயன்படுத்துவது.?!

Sleep

முந்திரி, வால்நட் : இவை ஆரோக்கியமான கொழுப்பு, டிரிப்டோபேன் (Tryptophan) மற்றும் ஓமேகா-3 கொழுப்பு அமிலங்கள் கொண்டவை. இவை மனஅழுத்தத்தை குறைத்து, மூளைச் செயல்பாட்டை சாந்தப்படுத்தி தூக்கத்தை தூண்டுகின்றன. 

வாழைப்பழம் : வாழைப்பழத்தில் உள்ள பொட்டாசியம் (Potassium) மற்றும் மெக்னீசியம் தசைகள் தளர்வடைய உதவுகின்றன. மேலும், இதில் உள்ள டிரிப்டோபேன், உடலில் செரட்டோனின் (Serotonin) ஆகவும் பின்னர் மெலட்டோனின் ஆகவும் மாறி தூக்கத்தை ஏற்படுத்துகிறது.

ஆகவே, தூங்குவதற்கு 30 நிமிடங்களுக்கு முன் இவ்வகை இயற்கை உணவுகளை எடுத்துக்கொண்டால், உடலும் மனமும் தளர்ந்து ஆழ்ந்த, சுகமான உறக்கத்தை பெறலாம். 

இதையும் படிங்க: உயிருக்கே உலை வைக்கும் பாமாயில்.. இவ்வளவு ஆபத்துக்கள் நிறைந்ததா.?!