#Breaking: அமரன் படத்தை பார்த்து கண்கலங்கி அழுத ரஜினிகாந்த்; காரணம் என்ன?.. அவரே சொன்ன தகவல்.!
அடேங்கப்பா..விட்டா மனுஷங்களையே மிஞ்சிடும் போல! இந்த நாய் செய்யும் வேலையை பார்த்தீங்களா! வைரலாகும் வீடியோ!!
தற்காலத்தில் நாய், பூனை போன்ற பல உயிரினங்களும் மனிதர்களை மிஞ்சும் அளவிற்கு ஏராளமான திறமைகளை கொண்டுள்ளன. மேலும் இணையத்தில் அவ்வப்போது மிருகங்கள் செய்யும் சேட்டைகள், குறும்புகள் குறித்த வீடியோக்கள் வெளியாகும். இந்த நிலையில் தற்போது நாய் ஒன்று தனது உரிமையாளர் செய்வதை போலவே யோகா செய்த வீடியோ வைரலாகி பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.
பொதுவாக சமூக வலைத்தளங்களில் நாய் குட்டிகள் பந்து விளையாடுவது, தண்ணீரில் விளையாடுவது, தூக்கி போடும் பொருட்களை எடுத்து வருவது என பல சேட்டைகள் செய்யும் வீடியோக்கள் உலாவும். இந்நிலையில் ஆஸ்திரேலியன் ஷெப்பர்டு நாய் அனைத்தையும் மிஞ்சும் வகையில் அசத்தலாக யோகா செய்துள்ளது.
This dog is actually doing yoga... pic.twitter.com/d7oK5EJa2l
— Rex Chapman🏇🏼 (@RexChapman) May 17, 2021
அதாவது நாய்க்குட்டி தனது உரிமையாளரை கண்டு அவர் செய்யும் யோகா அசைவுகள் ஒவ்வொன்றையும், அச்சுப் பிசறாமல் அப்படியே செய்துள்ளது. இந்த வீடியோ தற்போது வைரலாகி அனைவரையும் பெருமளவில் ரசிக்க வைத்துள்ளது.