உயிருக்கே உலை வைக்கும் டிஜே சத்தம்! நடனமாடும் போது ஏற்படும் திடீர் மரணங்கள்! ஆய்வில் எச்சரிக்கை....



dj-music-health-risks

இன்றைய காலத்தில் திருமண விழாக்கள் மற்றும் சிறப்பு நிகழ்ச்சிகளில் டி.ஜே. இசை இல்லாமல் கொண்டாட்டங்கள் முழுமையடையாது என்பதுபோல் மாறிவிட்டது. ஆனால், இந்த டி.ஜே. சத்தம் பல்வேறு ஆரோக்கிய அபாயங்களை உருவாக்குகிறது என்பதற்கான உண்மைகள் தற்போது வெளிப்படுகின்றன.

ஆய்வில் கண்டுபிடிப்பு

ஜெர்மனியின் மெய்ன்ஸ் பல்கலைக்கழக மருத்துவ மையம் 15,000 பேரில் நடத்திய ஆய்வில், அதிக ஒலிபெருக்கி மற்றும் டி.ஜே. ஒலிகள் இதயத் துடிப்பு, ரத்த அழுத்தம் மற்றும் மனஅழுத்தத்தை அதிகரிப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. இதன் விளைவாக மாரடைப்பு, மூளை பக்கவாதம், கர்ப்பிணி பெண்களுக்கு கருச்சிதைவு அபாயம் அதிகரிக்கலாம் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

சுற்றுச்சூழல் மற்றும் விலங்குகள் மீது தாக்கம்

100 டெசிபலுக்கு மேல் ஒலிகள் கேட்கும் திறனை பாதித்து சிறுவர்களுக்கு நிரந்தர கேளாமை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது. மனிதர்களுடன் மட்டுமல்லாமல், இந்த சத்தம் சுற்றுச்சூழலுக்கும் விலங்குகளுக்கும் தீங்கு விளைவிக்கிறது. தெலுங்கானாவில் டி.ஜே. சத்தம் காரணமாக 100க்கும் மேற்பட்ட கோழிகள் இறந்த சம்பவம் இதற்கு உதாரணமாகும்.

இதையும் படிங்க: ஆபத்தை தரும், தொடர் இருமல்.. புற்றுநோய் அபாயம்.. உஷார்.. இல்லன்னா உயிருக்கே ஆபத்து.!

பாதுகாப்பு நடவடிக்கைகள்

டி.ஜே. நிகழ்ச்சிகளில் சத்தத்தை குறைக்கும் வகையில் ஹெட்போன்கள், நுரையால் ஆன சாதனங்கள் பயன்படுத்தப்பட வேண்டும். 30 டெசிபல் வரை சத்தத்தை குறைக்கும் காது செருகிகள் கிடைக்கின்றன. இதனை உபயோகிப்பதன் மூலம் ஆரோக்கிய அபாயங்களை குறைக்க முடியும் என நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.

சிறப்பு நிகழ்ச்சிகளில் உற்சாகத்துடன் கூடிய DJ Music அனுபவிக்கும்போது, ஆரோக்கியத்தையும் சுற்றுச்சூழலையும் பாதுகாக்கும் முன்கூட்டிய எச்சரிக்கைகள் பின்பற்றப்படுவது அவசியம் என்பதை இந்த ஆய்வு தெளிவுபடுத்துகிறது.

 

இதையும் படிங்க: இதுக்கா இப்படி பன்றது! காதலி வீட்டு முன் மின்கம்பத்தில் ஏறி மின்சாரத்தை துண்டித்த காதலன்! காரணத்தை கேட்டா ஆடிப்போயிருவீங்க....வைரல் வீடியோ!