
Summary:
அனைவரையும் வியப்பூட்டும் அளவில் திருமண அழைப்பிதழ் ஒன்று அச்சிடப்பட்டுள்ளது.
தற்போது திருமண அழைப்பிதழ்களை நூதன முறையில் பொதுமக்களை கவரும் வண்ணம் அச்சிட்டு வழங்கப்படும் திருமண அழைப்பிதழ் சமூக வலைதளத்தில் வைரலாகி வருவது வழக்கம்.
அந்தவகையில், கொரோனா சமயத்தில் ஒருவர், "நீங்க பஸ் ஓடலனு வராம இருந்துராதீங்க, ஆட்டோ இல்லனாலும் சரி பக்கத்து வீட்டுல பைக்கை கடன் வாங்கிட்டச்சும் வந்துடுங்க. சாப்பாடுக்கு நடக்கறது தாவுறது எல்லம் வைக்கனும் ஆசை ஆனால் பிரியாணி மட்டும் தான் என்னால போட முடிஞ்சுது. குடி குடியை கெடுக்கும் அதனால் கொஞ்சமா குடுச்சு கோங்க என அந்த திருமண அழைப்பிதழில் குறிப்பிட்டிருந்தார்.
நவீன திருமண அழைப்பிதழ்...👩❤️👨 குவாட்டர், வாட்டர், சைடிஸ்.! 🍾🤔 pic.twitter.com/uCm5FmBHvY
— நல்ல நண்பன் 🔥🔥 (@NALLA__NANBAN) December 15, 2020
அந்த அழைப்பிதழ் பொதுமக்களிடம் பெரும் சிரிப்பலையை உண்டாக்கி அந்த திருமண அழைப்பிதழ் இணையத்தில் வைரலானது. அந்தவகையில் தற்போது அனைவரையும் வியப்பூட்டும் அளவில் திருமண அழைப்பிதழ் ஒன்று அச்சிடப்பட்டுள்ளது. அதாவது அந்த அழைப்பிதழில் சரக்கு, சைடிஷ், தண்ணீர் என மது அருந்துவதற்கு தேவையானவையை வைத்து திருமண அழைப்பிதழை தாயர் செய்துள்ளனர். அந்த திருமண அழைப்பிதழின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
Advertisement
Advertisement