எலும்புகளை வலுப்பெறச் செய்யும் சௌ சௌ கூட்டு... சுவையாக வீட்டில் செய்வது எப்படி?..!

எலும்புகளை வலுப்பெறச் செய்யும் சௌ சௌ கூட்டு... சுவையாக வீட்டில் செய்வது எப்படி?..!



chow-chow-kootu-for-healthy

சௌசௌவில் கால்சியம் சத்துகள் அதிகமாக காணப்படுவதால் எலும்புகளை வலுப்பெற செய்கிறது. மேலும், வயிறு சம்பந்தமான அனைத்து பிரச்சினைகளையும் தீர்க்கும். அத்துடன் வயிற்றில் தங்கியுள்ள அதிகப்படியான கொழுப்பை நீக்குவதற்கு உதவுகிறது. சௌசௌ காயை குழந்தைகளுக்கு கொடுக்கும்போது, உடல் வளர்ச்சியை ஊக்கப்படுத்தி, எலும்பு வளர்ச்சியை வலுவாக்க உதவுகிறது. அத்துடன் ரத்த அழுத்தத்தை சமநிலையில் வைத்துக் கொள்ளவும் உதவுகிறது.

இத்தகைய உடலுக்கு நன்மையளிக்கும் சௌ சௌ கூட்டு எப்படி தயாரிப்பது என பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

எண்ணெய் - 1தேக்கரண்டி
பச்சைமிளகாய் -1
கடுகு - 1தேக்கரண்டி
சீரகம் - 1தேக்கரண்டி
பெருங்காயத்தூள் - 1 சிட்டிகை
உளுத்தம் பருப்பு -1/2தேக்கரண்டி
துருவிய தேங்காய்  -2 தேக்கரண்டி
உப்பு -தேவைக்கேற்ப
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
துவரம் பருப்பு - 1 கப்
சௌசௌ - 2

healthytipsசெய்முறை :

★முதலில் சௌசௌவை தோல் நீக்கி, பொடியாக நறுக்கி கொள்ள வேண்டும். பின் அதனுடன் பச்சை மிளகாயை நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.

★அடுத்து மிக்ஸியில் தேங்காய் மற்றும் சீரகத்தை சேர்த்து அரைக்க வேண்டும்.
பின், துவரம்பருப்பை வேகவைத்து சட்டியில் போட்டு மசித்து எடுத்து கொள்ளவும். 

★இதனையடுத்து ஒரு கடாயை அடுப்பில் வைத்து, அதில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்த பின் கடுகு, பச்சை மிளகாய், உளுத்தம் பருப்பு மற்றும் கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து தாளித்து அதனுடன் வெங்காயம் மற்றும் பெருங்காயத் தூள் சேர்த்து வதக்க வேண்டும்.

★வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும், அதில் உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து 2 நிமிடம் வேகும் வரை வதக்க வேண்டும். அடுத்து மசித்து வைத்த துவரம்பருப்பை சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, உப்பு தேவைக்கேற்ப சேர்த்து நன்றாக கொதிக்க வைக்க வேண்டும்.

★இறுதியாக மிக்ஸியில் அரைத்த தேங்காய் விழுதை அதில் சேர்த்து கிளறி, பச்சை வாசனை போகும் வரை நன்கு கொதிக்க வைத்து பின் இறக்கினால் சௌசௌ கூட்டு தயாராகிவிடும்.