திடீரென பிரபல பிக்பாஸ் நடிகை நள்ளிரவில் மரணம்! நடந்தது என்ன?
குழந்தைகளுக்கும் பிடிக்கும் வகையில்; சுவையான வெஜிடபிள் சீஸ் ஆம்லெட்...!

குழந்தைகளுக்கு பிடிக்கும் வகையில் சூப்பரான சீஸ் வெஜிடபிள் ஆம்லெட்.
சீஸ் வெஜிடபிள் ஆம்லெட் செய்ய தேவையான பொருட்கள் :
முட்டை - 3,
வெங்காயம்,
குடைமிளகாய் - 1,
முட்டைகோஸ் - 100 கிராம்,
கேரட்- 1, பெரிய
பச்சை மிளகாய் - தேவைக்கேற்ப,
கொத்தமல்லித்தழை - சிறிதளவு,
சீஸ் - ஒரு சிறு கட்டி,
எண்ணெய் - தேவையான அளவு, மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை,
உப்பு - சுவைக்கேற்ப.
செய்முறை:
வெங்காயம், பச்சை மிளகாய், குடைமிளகாய், கொத்தமல்லி, கேரட், கோஸ் எல்லாவற்றையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். முட்டையை நன்கு அடித்து வைத்துக் கொள்ளவும். சீஸை துருவிக்கொள்ளவும்.
காய்கறிக் கலவையுடன் மஞ்சள்தூள், உப்பு சேர்த்து கலந்து, அடித்து வைத்திருக்கும் முட்டையில், நறுக்கிய காய்கறிகளைக் சேர்ந்து நன்றாக கலந்து கொள்ளவும்.
தோசைக்கல்லில் எண்ணெய் ஊற்றி சூடானதும் முட்டை, காய்கறிக் கலவையை சிறு அடைகளாக ஊற்றவும், பின்னர் திருப்பி போட்டு மேலே துருவிய சீஸைப் பரவலாகத் தூவி, வெந்ததும் திருப்பிப் போட்டு வேகவிடுங்கள். விருப்பப்பட்டால், மிளகுதூள் தூவிப் பரிமாறவும். சூடாகச் சுவையான சீஸ் வெஜிடபிள் ஆம்லெட் ரெடி.