நாவில் எச்சில் ஊற வைக்கும் செட்டிநாடு ஸ்டைல் முட்டை கிரேவி செய்வது எப்படி.?Chettinadu style egg carry recipe

மிகவும் சுவையாகவும், நாவில் எச்சில் ஊற வைக்கும் செட்டிநாடு ஸ்டைல் முட்டை கிரேவி செய்வது எப்படி என்று இங்கு பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
முட்டை - 3
பெரிய வெங்காயம் - 1
துருவிய தேங்காய் - சிறிதளவு 
தக்காளி - 2
பூண்டு - 3 பல்
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
மல்லி தூள் - 3 டீஸ்பூன்
மிளகு - 1/2 டீஸ்பூன்
சோம்பு - 1 டீஸ்பூன்
இலவங்கப்பட்டை - 1
சீரகம் - 1டீஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு 

Egg carry recipe

முதலில் முட்டையை வேக வைத்து ஓட்டை நீங்கி தனியாக வைத்து கொள்ளவும் பின்னர் ஒரு மிக்ஸி ஜாரில் துருவிய தேங்காய், தக்காளி,மிளகு, பூண்டு, சீரகம், மஞ்சள் தூள், மிளகாய் தூள் மற்றும் மல்லி தூள் ஆகியவற்றை சேர்த்து மென்மையாக அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

இதையும் படிங்க: இந்த அறிகுறிகள் உங்களுக்கு இருக்கிறதா.? கண்டிப்பாக மருத்துவரை பாருங்க.!?

பின்னர் அடுப்பில் ஒரு கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் பட்டை, சோம்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்ததும் வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்கி கொள்ளவும். அதனுடன் அரைத்த மசாலாவையும் சேர்த்து நன்கு வதக்கி விடவும். பின்னர் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்கு கொதித்ததும் அதில் முட்டையை சேர்த்து இறக்கினால் சுவையான செட்டிநாடு ஸ்டைல் முட்டை கிரேவி தயார். 

இதையும் படிங்க: கீவி பழத்தால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?.. அசத்தல் டிப்ஸ் இதோ.!