கர்ப்பிணி பெண்கள் பப்பாளி பழம் சாப்பிடலாமா மருத்துவர்களின் அறிவுரை என்ன.!?



Can pregnant womens eat papaya

பப்பாளி பழம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்

பொதுவாக பழங்களிலேயே பப்பாளி பழம் பெண்களுக்கு மிகவும் ஊட்டச்சத்து தருபவையாக இருந்து வருகிறது. பால் கொடுக்கும் தாய்மார்கள் பப்பாளி பழத்தை தினமும் சாப்பிட்டு வந்தால் நல்லது. மலச்சிக்கல் பிரச்சனை, செரிமான பிரச்சனை, குடல் சம்பந்தப்பட்ட பிரச்சனை உள்ளவர்கள் பப்பாளி பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வரலாம். குறிப்பாக செரிமான மாத்திரை பப்பாளி பழத்திலிருந்து தயாரிக்கப்படுகிறது.

Papaya

உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் பப்பாளி பழம் சாப்பிடும் போது நீண்ட நேரம் பசி எடுக்காமல் கட்டுப்படுத்துகிறது. இதில் உள்ள ஆன்ட்டி ஆக்சிடெண்ட்கள் இதயத்தில் ரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. மேலும் சர்க்கரை நோய், பக்கவாதம், ரத்த அழுத்தம் போன்றவை ஏற்படாமல் பாதுகாக்கிறது. இதில் உள்ள அதிகப்படியான நார்ச்சத்து உடலில் பல நன்மைகளை ஏற்படுத்துகிறது.

இதையும் படிங்க: உடலில் உள்ள கொழுப்பு ஒரே வாரத்தில் குறைய பப்பாளி மற்றும் அன்னாசி பழத்தை இப்படி சாப்பிட்டு பாருங்க.!?

கர்ப்பிணிகள் பப்பாளி பழம் சாப்பிடலாமா

மேலும் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துவதோடு, கண் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள், தோல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளையும் சரி செய்கிறது. பப்பாளி பழம் சாப்பிட்டால் கருக்கலைப்பு உண்டாகும் என்று பலர் கூறி வருகின்றனர். ஆனால் இதில் உண்மை இல்லை. மாறாக இதில் அதிக அளவு ஊட்டுச்சத்துக்கள் தான் நிறைந்துள்ளது. ஆனால் பப்பாளி காய் கர்ப்பிணி பெண்கள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

Papaya

அசைவ பிரியர்களுக்காக

ஆட்டுக்கறியில் பப்பாளி காயை சிறிதாக நறுக்கி வேகவைத்து சாப்பிடுவது நன்மையை தருவதோடு, ஆட்டுக்கறியும் மிருதுவாகவும், சுவையாகவும் இருக்கும். இவ்வாறு பப்பாளி காய், பப்பாளி பழம் போன்ற அனைத்துமே ஊட்டச்சத்துக்கள் அதிகமாக உள்ளதால் இதை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிட வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்து வருகின்றனர்.

இதையும் படிங்க: "உங்களுக்கு இந்த நோய் இருந்தா நீங்க பப்பாளி சாப்பிடக் கூடாது!" என்ன காரணம் தெரியுமா.?