லைப் ஸ்டைல் சமூகம்

"என்னையா ஏமாத்துற" - காதலியின் திருமணத்தில் வெச்சு செய்த இளைஞர்! என்ன மூளை

Summary:

Boy revenged betrayed girlfriend in marriage

காதலில் ஏமாற்றம் என்பது தற்பொழுது பொதுப்படையான ஒன்றாகிவிட்டது. யார், யாரை ஏமாற்றுகிறார்கள் என்பது காதலர்களைப் பொறுத்தது. காரணம் சரியாக இருந்தால் அதனை ஏற்றுக்கொள்ளும் மணப்பக்குவம் பலருக்கு வந்துவிட்டது. 

ஆனால் வேண்டுமென்றே ஏமாற்றும் சிலரை எவ்வளவு ஆழமாக அன்பு செய்திருந்தாலும் மண்ணிக்க மணம் வருவதில்லை. அப்படி தாங்க முடியாத ஏமாற்றத்தை அனுபவித்த ஒரு இளைஞன் காதலியை பழிவாங்கிய ஒரு சுவாரஸ்யமான சம்பவம் தான் இது. 

அனிக் என்ற இளைஞர் சமியா என்ற பெண்ணை 8 மாதங்களாக காதலித்துள்ளார். இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் சமியா அனிக்கின் காதலை கைவிட்டுள்ளார். அனிக் எவ்வளவோ முயன்றும் சமியா மீண்டும் அனிக்கின் காதலை ஏற்கவில்லை. 

திடீரென சமியாவிற்கு கனடாவில் வசிக்கும் ஒரு நபருடன் திருமணம் நிச்சயமானது. பிறகு தான் தெர்ந்தது வசதியான வாழ்க்கை வாழவேண்டி தான் சமியா காதலை மறுத்துள்ளார் என்று. இதனால் மனமுடைந்த அனிக் சமியாவை பழிதீர்க்க நல்ல சந்தர்பத்திற்காக காத்திருந்தார். 

இந்நிலையில் சமியாவின் திருமணமும் வந்தது. அந்த திருமணத்திற்கு அனிக் வருவார் என சமியா சற்றும் எதிர்பார்கவில்லை. திருமணத்திற்கு வந்த அனிக் நன்றாக சப்பிட்டுவிட்டு சமியா மற்றும் அவரது கணவருடன் செல்பி எல்லாம் எடுத்துக்கொண்டார். இதையெல்லாம் பார்த்த சமியாவிற்கு என்ன சொல்லதென்றே  தெரியவில்லை. 

எல்லாம் நன்றாக சென்றுகொண்டிருக்க கடைசியாக தான் தன் திட்டத்தை நிறைவேற்றினார் அனிக். அவர் தன்னுடன் கொண்டுவந்திருந்த பேப்பர்களை திருமணத்திற்கு வந்த விருந்தினர்களிடம் விநியோகிக்க தவங்கினார். அதனை படித்து பார்த்த அனைவருக்கும் அதிர்ச்சி காத்திருந்தது. 

அந்த பேப்பர்களில் சமியா அவனை காதலிக்கும் போது சாட் செய்த அனைத்து உரையாடல்களையும் அனிக் பிரிண்ட் செய்து கொடுத்துள்ளார். இதனை படித்த உறவினர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். சமியாவும் கண்கலங்கினார். தன் வேலை முடிந்துவிட்ட திருப்தியில் அனிக் அங்கிருந்து கிளம்பிவிட்டார். 


Advertisement