பெண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் கருப்பு உளுந்து இட்லி பொடி... வீட்டிலேயே செய்வது எப்படி?.!

பெண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் கருப்பு உளுந்து இட்லி பொடி... வீட்டிலேயே செய்வது எப்படி?.!



black-dhal-idly-powder-for-girls-healrh

பெண்களின் ஆரோக்கியத்திற்கு உதவும் கருப்பு உளுந்து இட்லி பொடி எவ்வாறு தயாரிப்பது என்பதை பற்றியதுதான் இந்த செய்திக்குறிப்பு.

கருப்பு உளுந்தை உண்பதன் மூலமாக இரும்பு சத்து அதிகமாகும். அத்துடன் பெண்கள் இதனை தினமும் உண்டு வந்தால் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மையளிக்கும்.

தேவையான பொருட்கள் :

கடலைப்பருப்பு - 1/4 கப்
கறிவேப்பிலை - 1 கைப்பிடி
வெள்ளை எள் -2 தேக்கரண்டி
கட்டி பெருங்காயம் - சிறிதளவு
நல்லெண்ணெய் - தேவைக்கேற்ப
பட்டை மிளகாய் -10
முழு பூண்டு -2idlyசெய்முறை :

★முதலில் கட்டிப் பெருங்காயத்தை, ஒரு தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து குறைவான தீயில் வறுக்க வேண்டும்.

★பின் ஒரு கடாயை அடுப்பில் வைத்து கருப்பு உளுந்தை எண்ணெய் சேர்க்காமல் மிதமான தீயில் வைத்து, நிறம் மாறும் வரை வறுக்க வேண்டும். குறைந்தது 10 நிமிடங்கள் வதக்கிய பின் வேறு ஒரு தட்டில் இதனை மாற்ற வேண்டும்.

★அடுத்து ஒரு தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து கடலைப்பருப்பினை போட்டு குறைவான தீயில் வறுக்க வேண்டும்.

★தொடர்ந்து மிளகாய் மற்றும் வெள்ளை எள், கறிவேப்பிலை இவை அனைத்தையும் தனித்தனியே வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

★பின் வறுத்த அனைத்து பொருட்களையும் ஒரு அகலமான தட்டில் ஆற வைத்து, மிக்ஸியில் போட்டு அரைத்து, தோல் உரிக்காத பூண்டு மற்றும் உப்பை சேர்த்து அரைக்க வேண்டும்.

★இறுதியாக அரைத்த பொடியை காற்றுப்புகாத ஒரு பாட்டிலில் போட்டு வைத்தால், சுவையான வாசனையான கருப்பு உளுந்து இட்லி பொடி தயாராகிவிடும்.