பாகற்காயை கசப்பில்லாமல் சாப்பிட சூப்பர் ஐடியா.?! இப்பவே ட்ரை பண்ணுங்க.!
சுத்தமாக கசப்பே இல்லாமல் பாகற்காயில் குழம்பு வைத்து சாப்பிடுவது எப்படி என பார்க்கலாம். பாகற்காய் என்றாலே பலருக்கும் அதை பிடிப்பதில்லை. பெரியவர்கள் கூட கசப்புத் தன்மையை மனதில் வைத்துக்கொண்டு பாகற்காயை சாப்பிடுவதில்லை. ஆனால், பாகற்காயை சாப்பிடுவதால் ஈடு இணை இல்லாத நன்மைகள் நமக்கு கிடைக்கிறது. வயிற்றில் இருக்கும் புழு பூச்சிகளை அது சுத்தம் செய்து குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. கசப்பில்லாமல் பாகற்காயில் குழம்பு எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம் வாங்க.
தேவையான பொருட்கள்
புளி - சிறிதளவு
பாகற்காய் -200 கிராம்
பெரிய வெங்காயம் நறுக்கியது - 2
கடுகு - ஒரு ஸ்பூன்
தக்காளி பொடியாக நறுக்கியது - 2
பூண்டு நசுக்கியது - 15 பல்
மல்லித்தூள் - 2 ஸ்பூன்
மிளகாய் தூள் - 2 ஸ்பூன்
வெல்லம் துருவியது - 1 ஸ்பூன்
மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்
கருவேப்பிலை - சிறிதளவு
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
தண்ணீர் - தேவையான அளவு.
இதையும் படிங்க: சுவையான அவரைக்காய் பொரியல் செய்வது எப்படி?..!
செய்முறை
பாகற்காயை பொடியாக வெட்டி ஒரு பாத்திரத்தில் போட்டு அதில் மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து கிளறி 15 நிமிடம் ஊற விடவும். புளியை ஊறவைத்து கரைத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் பாகற்காயை கொட்டி நன்றாக வறுத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும். பின்பு அதே கடாயில் எண்ணெய் ஊற்றி சூடேற்றி கடுகு, கருவேப்பிலை போட்டு தாளித்து பொடியாக நறுக்கிய வெங்காயம், பூண்டு சேர்த்து நன்றாக வதக்கி பின் தக்காளியை சேர்த்து வதக்கவும்.
தக்காளி வதங்கிய பின் பாகற்காயை சேர்த்து கிளறி, அதில் மல்லி தூள், மிளகாய் தூள், மஞ்சள் தூள் தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறி பின் புளி கரைசலை சேர்த்து கிளறி, 10 நிமிடம் கொதிக்க விடவும். இறுதியாக அதில் சிறிது வெல்லத்தை சேர்த்து 2 நிமிடங்கள் கொதிக்க வைத்து இறக்கலாம். இந்த பாகற்காய் குழம்பு சிறிது கூட கசக்காது. சூடான சாதத்துடன் சாப்பிடும்போது அருமையாக இருக்கும்.
இதையும் படிங்க: சுவையான புதினா பன்னீர் புலாவ் செய்வது எப்படி?.. டிப்ஸ் உள்ளே.!