வேட்டையன் படம் ஓடிய திரையரங்கில் காலாவதியான பாப்கார்ன்; ரஜினி ரசிகர்கள் ஆவேசம்.!
"குளிர் காலத்தில் ஏற்படும் அரிப்பு பிரச்சனைக்கு தீர்வு வேண்டுமா?!"
குளிர் காலத்தில் அனைவருக்கும் ஏற்படும் ஒரு பொதுவான பிரச்சனை தான் சொறி எனப்படும் அரிப்பு. குளிர் காலத்தில் ஏற்படும் சொறி ஒரு பருவகால ஒவ்வாமைப் பிரச்சனை தான். இக்காலக்கட்டத்தில் நமது சருமம் வறண்டு, அதிகளவு நீரிழப்பை சந்திக்கும்.
அதனால் தோலில் தடிப்புகள் ஏற்பட்டு அரிப்பு ஏற்படும். இதற்கு வீட்டு வைத்திய முறையில் எளிதான நிவாரணம் பெறலாம். சுத்தமான துணியை பாலில் நனைத்து சொறி பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி சில நிமிடங்கள் ஊறவிடவும். மேலும் தேங்காய் எண்ணெய் மற்றொரு இயற்கை வைத்திய முறையாகும்.
இது பூஞ்சை, பாக்டீரியா மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. எனவே தேங்காய் எண்ணெய் அனைத்து தோல் பிரச்சனைகளுக்கும் சிறந்த நிவாரணியாகும். மேலும் பாதிக்கப்பட்ட சருமத்தில் தயிரை தடவி சில நிமிடங்கள் கழித்து கழுவவும்.
தயிர் ஒரு சிறந்த நிவாரணியாகும். இது பாதிக்கப்பட்ட சருமத்தை குளிர்விக்கிறது. மேலும் தேன், பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. இது சருமத்தை மினுமினுப்பாகவும், ஈரப்பதத்துடனும் வைத்திருக்க உதவுகிறது. மேலும் தேன் குளிர்காலத்தில் ஏற்படும் தடிப்புகளில் இருந்து தோலை காக்கிறது.