"இயற்கையின் மிகச்சிறந்த வரப்பிரசாதம் மண்பானை தண்ணீர்" மண்பானையில் தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்.!?Benefits of drinking mud pot water

பொதுவாக நம் உடலுக்கு தண்ணீர் என்பது மிகவும் அவசியமான ஒன்றாக இருந்து வருகிறது. நாம் தினமும் போதுமான அளவு தண்ணீர் குடிக்கவில்லை என்றால் நம் உடலில் பல வகையான நோய் பாதிப்புகள் ஏற்படுகின்றது. மேலும் தண்ணீர் சுத்தமானதாகவும் இருக்க வேண்டும் என்பது அவசியம். இவ்வாறு சுத்தமான தண்ணீருக்காக பலர் பாட்டில்களில் அடைத்து விற்கப்படும் மினரல் வாட்டர் பாட்டில்களை வாங்கி பருகுகின்றனர்.

Mud pot

இயற்கையின் வரபிரசாதம் மண்பானை

ஆனால் தற்போது கோடை காலம் என்பதால் பாட்டில்களில் விற்கப்படும் தண்ணீரை பருகுவது உடல் நலத்திற்கு ஏற்றதல்ல. இந்த பிளாஸ்டிக் பாட்டில்கள் வெயிலில் உருகி தண்ணீருடன் கலந்து விடுவதால் இது நம் உடலில் பல கேடுகளை விளைவிக்கிறது. எனவே இயற்கையின் வரப்பிரசாதமான மண் பானையில் வைத்துள்ள தண்ணீரை குடிப்பது மிகவும் சிறந்தது.

இதையும் படிங்க: உலர் திராட்சையை ஊறவைத்து தினமும் சாப்பிட்டு வந்தால், உடலில் நடக்கும் மாற்றங்கள் என்னென்ன தெரியுமா.!?

மண்பானை தண்ணீர் குடிப்பதால் உடலில் ஏற்படும் மாற்றங்கள்

1. மண்பானை தண்ணீர் உடலுக்கு குளிர்ச்சியை தருவதோடு, நீர் வறட்சி ஏற்படாமல் பாதுகாக்கிறது.
2. உடலில் வளர்சிதை மாற்றத்தை ஊக்குவிக்கிறது.
3. இதில் இரும்புச்சத்து, தாதுக்கள், ஆன்டிஆக்சிடென்ட்கள் போன்ற பல வகையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகப்படுத்துகிறது.
4. ஜீரண மண்டலத்தை மேம்படுத்தி, செரிமான பிரச்சனையை சரி செய்கிறது.
5. குறிப்பாக மண் பானையில் உள்ள தண்ணீரை பருகும் போது மினரல் பாட்டில்களில் உள்ள தண்ணீரை விட மிகவும் சுவையாக இருக்கும்.

Mud pot

6. மண்பானையில் தண்ணீரை ஊற்றி விட்டு இரண்டு முதல் ஐந்து மணி நேரங்களுக்கு பின்பாக குடிக்கும்போது தண்ணீரில் உள்ள அழுக்குகள் அடியிலேயே தங்கி விடுகிறது என்பதால் மண்பானையை இயற்கையின் வாட்டர் பில்டர் என்று அழைத்து வருகின்றனர்.

இதையும் படிங்க: காலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் நிகழும் அதிசயம் தெரியுமா!