வெண்டைக்காய் ஊற வைத்த நீரை தினமும் காலையில் குடித்து வந்தால் இவ்வளவு நன்மைகளா.?

வெண்டைக்காய் ஊற வைத்த நீரை தினமும் காலையில் குடித்து வந்தால் இவ்வளவு நன்மைகளா.?



benefits-of-drinking-ladies-finger-soaked-water

பொதுவாக நம் வீடுகளில் சமைத்து சாப்பிடும் காய்கறிகள், பழங்கள், கீரைகள் போன்றவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு சுவையில் இருந்தாலும், இவற்றில் பல வகையான ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இவற்றை உணவாக எடுத்துக் கொள்ளும்போது நம் உடல் ஆரோக்கியமாகவும், ஊட்டச்சத்து நிறைந்ததாகவும் இருக்கும்.

வெண்டைக்காய்

குறிப்பாக வெண்டைக்காய் வழுவழுப்பான தன்மையையும், சுவையையும் கொண்டிருந்தாலும் இதை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளும்போது நம் உடலுக்கு பலவகையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்கின்றன. அனைத்து காலநிலைகளிலும் கிடைக்கும் வெண்டைக்காயை நீரில் ஊற வைத்து தினமும் காலையில் அந்த நீரை குடித்து வந்தால் உடலுக்கு பலவிதமான நன்மைகள் கிடைக்கும். அவை என்னென்ன என்பதை பற்றி பார்க்கலாம்?

வெண்டைக்காயில் வைட்டமின் பி, வைட்டமின் சி, போலிக் அமிலம், நார்ச்சத்து, இரும்புச்சத்து போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் வெண்டைக்காயை பொரியலாகவோ அல்லது நீரில் ஊற வைத்து அந்த நீரை தினமும் காலையில் குடித்து வந்தால் பசியை கட்டுப்படுத்துவதுடன், உடலில் உள்ள கொழுப்புகள் கரையும். உடலின் மெட்டபாலிசத்தை மேம்படுத்தி வெயில் காலங்களில் உடலில் உள்ள நீர் சத்து குறைவதை தடுக்கிறது.

வெண்டைக்காய்

மேலும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது, ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தி நீரிழிவு பிரச்சனையை குறைப்பது, இதயத்திற்கு செல்லும் ரத்தத்தினை சுத்தப்படுத்துவது, உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுவது, சிறுநீரக பிரச்சனைகளை குறைப்பது போன்ற பல வகையான பாதிப்புகளில் இருந்து நம்மை பாதுகாக்கிறது. வெண்டைக்காயை சிறிது சிறிதாக வெட்டி நீரில் ஊற வைத்து அடுத்த நாள் காலையில் குடித்து வந்தால் மேலே குறிப்பிட்ட நோய் பாதிப்பில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ளலாம்.