எலும்புக்கு வலுசேர்க்கும், சப்போட்டா பழம்.. மன அழுத்தத்தை குறைக்க உதவும்.!



benefits of chickoo fruit

சிக்கூ என்கிற சப்போட்டா பழத்தின் ஆரோக்கிய நன்மைகள் குறித்து பார்க்கலாம். இந்த சப்போட்டா பழம் உடலில் இயற்கையாக சர்க்கரையை நிரைக்கிறது. எனவே, உடலுக்கு உடனடி ஆற்றல் தரக்கூடியது. இதில், நார்ச்சத்து அதிகம் இருப்பதால் இது மலச்சிக்கல் ஏற்படுவதை தடுக்கும். 

சப்போட்டா பழத்தில் இரும்பு சத்து, தாதுக்கள், பாஸ்பரஸ் மற்றும் கால்சியம் உள்ளிட்டவை இருப்பதால் இது எலும்புகளை வலுவாக்க உதவுகிறது. ஹீமோகுளோபின் குறைவாக இருப்பவர்களுக்கு சப்போட்டா பழம் மிகவும் அவசியமாகும். அவர்களது ஹீமோகுளோபின் அளவை சப்போட்டா பழம் அதிகரிக்கிறது.

benefits

சப்போட்டா பழத்தில் விட்டமின் சி மற்றும் விட்டமின் ஏ ஆகியவை இருப்பதால், உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை இது அதிகரிக்கிறது. சப்போட்டா பழத்தில் இருக்கும் விட்டமின் 'ஏ' கண் பார்வை குறைபாட்டை நீக்கி கண் ஆரோக்கியம் மேம்பட உதவுகிறது. 

இதையும் படிங்க: சளி பிடித்தால், இலந்தை பழம் சாப்பிடக்கூடாதா.? உண்மை என்ன.. தெரிஞ்சுக்கலாம் வாங்க.!

இதில் உள்ள ஆண்டிஆக்சிடென்ட்கள் சரும அழகை மேம்படுத்தி, மெருகேற்றுகிறது. சப்போட்டா பழத்தில் செடேட்டிவ் தன்மை இருப்பதால் மன அழுத்தத்தை குறைத்து நல்ல தூக்கத்தை ஏற்படுத்த உதவுகிறது. 

இந்த பழத்தை சர்க்கரை நோய் இருப்பவர்கள் மருத்துவருடன் ஆலோசித்து விட்டு சாப்பிடுவது நல்லது. மேலும் ,சப்போட்டா பழம் அதிக அளவில் சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்கக்கூடும். எனவே, மிதமான அளவில் சாப்பிடுவது உடலுக்கு நல்லது.

இதையும் படிங்க: தினமும் ஒரு முட்டை சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா.?!