பீட்ரூட்டை இப்படி ஜூஸ் செய்து குடித்து பாருங்கள்.. குழந்தைகள் கூட விரும்பி குடிப்பார்கள்.!

பீட்ரூட்டை இப்படி ஜூஸ் செய்து குடித்து பாருங்கள்.. குழந்தைகள் கூட விரும்பி குடிப்பார்கள்.!


Beetroot juice tips

நமது உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தியை ஏற்படுத்தும் அற்புத பானம் பீட்ரூட் ஜூஸ் மேலும் ரத்தத்தில் அதிகளவு ஹீமோகுளோபின் வழங்குவதில் பெரும்பங்கு வகிக்கிறது.

beetroot

உடலில் ரத்த சிகப்பணு குறைவாக இருக்கும் நபர்களுக்கு மூச்சு திணறல், உடல் சோர்வு, இரத்த சோகை, பசியின்மை, தலைவலி போன்ற பாதிப்புகள் ஏற்படும். இவ்வாறு உடல் பாதிக்கப்பட்டு நோய் எதிர்ப்பு சக்தி இல்லாமல் பல்வேறு நோயால் பாதிக்கப்படுவர்.

பீட்ரூட் ஜூஸ் செய்ய தேவையான பொருட்கள்

பீட்ரூட்- 2

எலுமிச்சம் பழம் - 1

தேன் - சிறிதளவு

இஞ்சி - சிறு துண்டு

தோல் நீக்கிய பீட்ரூட்டை துண்டுகளாக்கி பின் ஒரு மிக்ஸி ஜாரில் தேன், பீட்ரூட் துண்டுகள், இஞ்சி சிறு துண்டு, எலுமிச்சை சாறு போன்றவற்றை ஊற்றி ஒரு டம்ளர் அளவு தண்ணீர் ஊற்றி நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

beetroot

பின்பு அரைத்தவற்றை வடிகட்டி ஐஸ் கட்டி சேர்த்து குடிக்கலாம். இவ்வாறு வாரத்திற்கு இரண்டு முறை குடித்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். ரத்தத்தில் ரத்த சிகப்பணு எண்ணிக்கை உயரும்.