"காலைல சாப்பிட நேரம் இல்லையா.?!", கண்டிப்பா.. இதைப் படிங்க.!

"காலைல சாப்பிட நேரம் இல்லையா.?!", கண்டிப்பா.. இதைப் படிங்க.!



are-you-skipping-breakfast-then-you-should-read-this

ஹலோ! நான் உங்கள் வயிறு பேசுகிறேன்.

ஒரு நாளுடைய முக்கியமான உணவு என்பது காலை உணவு தான். அதை ஏங்க சாப்பிட மாட்டேங்கிறீங்க? நீங்கள் அதை தவிர்ப்பதால் நான் எவ்வளவு இன்னல்களுக்கு உள்ளாகிறேன் தெரியுமா?

இரவு நீங்கள் உணவு எடுத்துக் கொண்ட பிறகு கிட்டத்தட்ட 6 to 8 மணி நேரம் கழித்து உணவு (ஆற்றல்) கிடைக்கப் போகிறது என்று காத்துக் கொண்டிருக்கும் போது உங்களால் காலை உணவு தவிர்க்கப்படுகிறது. சில நேரம் உங்களது வேலை பளு காரணமாக தவிர்க்கிறீர்கள். சில நேரம் வேண்டுமென்றே தவிர்க்கிறீர்கள். இதனால் அன்றைய வேலைகளுக்கு தேவையான ஆற்றலை என்னால் கொடுக்க முடிவதில்லை. மாறாக உடலில் இருந்து ஆற்றலை எடுத்துக் கொள்ளும் போது உங்களுக்கு உடல் சோர்வு ஏற்படும். தலைவலி, வயிற்று வலி, அஜீரணக் கோளாறு, மயக்கம், அதிகப்படியான பசி போன்றவற்றை உண்டாக்குவேன்.

Health
 நீங்கள் காலை உணவை தவிர்ப்பதால் எடை குறையும் என்று நினைக்கிறீர்கள், மாறாக அதிகப்படியான பசியின் காரணமாக உணவு எடுத்துக் கொள்ளும் அளவு அதிகரிக்கும். நொறுக்கு தீனி சாப்பிடவும் தோன்றும். உடல் எடையும் அதிகரிக்கும். இதனால் மனச்சோர்வு மற்றும் மனம் சார்ந்த பிரச்சினைகளும் உண்டாகும்.

உங்கள் வளர்ச்சிதை மாற்றத்தில் (Metabolism) கோளாறு என்றால் என்னை குறை கூறாதீர்கள். நீங்கள் காலை உணவை தவிர்ப்பது தான் அதற்கு காரணம். நாள்பட்ட நோய்களின் வீரியம் அதிகரித்து ஆரோக்கியம் முழுவதுமாக சீர்குலைய நேரும்.

Health

"பசி வந்துட்டா, நீ நீயா இருக்க மாட்ட" என்று விளம்பரங்களில் வருவது போல் அன்றைய நாள் முழுவதும் கடுகடு, சிடுசிடுவென்று இருக்கக்கூடும்.

உங்கள் காலை உணவை தவிர்க்கும் போது என்னால் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்க முடியாது. எனவே காலை உணவை தவிர்க்காமல் எடுத்துக் கொள்வதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். நலமுடன் வாழுங்கள்....