ஃபேனை சுத்தம் செய்ய கஷ்டமா இருக்கா.?! இந்த ட்ரிக்ஸ் யூஸ் பன்னுங்க.!



an-easy-way-to-clean-a-fan

நம்மில் பலரும் வீட்டை எப்போதும் சுத்தமாக வைத்திருப்போம். ஆனால் இந்த மின்விசிறியை சுத்தம் செய்வது நமக்கு பெரிய வேலையாகத் தோன்றும். அதில் இருக்கும் ஒட்டடை, தூசி, எண்ணெய் பிசுபிசுப்பு எப்படி சுத்தம் செய்வது என்று குழப்பதில் இருப்போம். அதற்க்கான ஒரு சின்ன டிப்ஸ் பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.

மின்விசிறியை சுத்தம் செய்ய தேவையானப் பொருட்கள் :

வினிகர் - 1 கப் 

தண்ணீர் - 3 பெரிய டம்ளர் 

வாஷிங் திரவம் - 1 டேபிள்ஸ்பூன் 

பேக்கிங் சோடா - 5 டேபிள்ஸ்பூன்

Cleaning the fan

செய்முறை :

முதலில் ஒரு பாத்திரத்தில் மேலே கொடுக்கப்பட்டுள்ள அளவுகளின் படி வினிகர், தண்ணீர், வாஷிங் திரவம், பேக்கிங் சோடா ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்துக் கொள்ளவும்.

பிறகு, அந்த கரைசலில் ஒரு காட்டன் துணியை எடுத்து 5 அல்லது 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும். இப்போது, அந்த துணியை லேசாக பிழிந்து விட்டு மின்விசிறியின் இறக்கைகளை நன்றாகத் துடைத்து எடுக்க வேண்டும். இப்போது மின்விசிறி பார்க்க புதிது போல இருக்கும். மேலும், எண்ணெய் பிசுபிசுப்பும் சுத்தமாக இருக்காது.

குறிப்பு :

மேலும், பேக்கிங் சோடா மற்றும் அரை எலுமிச்சைக் கொண்டு தேய்த்தால் பித்தளைப் பொருட்கள் பளிச்சின்னு மாறும்.