அந்தமானில் கச்சேரி.. இன்ப சுற்றுலா சென்ற அய்யனார் துணை நடிகர்கள்.. வைரலாகும் வீடியோ.!
பிரசவத்திற்குப் பிறகான தழும்புகள் குறித்து மகப்பேறு மருத்துவர் என்ன சொல்கிறார்.?
சென்னையைச் சேர்ந்த மகப்பேறு மருத்துவர் ரம்யா கபிலன், பிரசவத்திற்குப் பின் ஏற்படும் தழும்புகள் குறித்துக் கூறுகிறார். முதலில் கர்ப்பிணிகள் தங்கள் உடல் எடையில் கவனம் செலுத்த வேண்டும். கர்ப்ப காலத்தில் எடை அதிகரிப்பு என்பது எல்லோருக்கும் சகஜம் தான்.

ஆனால் அது ஆரோக்கியமான எடை அதிகரிப்பாக மட்டுமே இருக்கவேண்டும். எடை அதிகரிக்கும் போது தான் சருமம் விரிவடைந்து இழுக்கப்பட்டு, ஸ்ட்ரெட்ஸ் மார்க்ஸ் எனப்படும் தழும்புகள் ஏற்படும். ஆரோக்கியமான உணவுப்பழக்கமும், மிதமான உடற்பயிற்சியும் அவசியம்.
மேலும் போதுமான அளவு தண்ணீர் குடிக்கவேண்டும். இதனால் சருமம் மென்மையாக இருக்கும். மென்மையான சருமத்தில் ஸ்ட்ரெட்ஸ் மார்க்ஸ் அவ்வளவு சுலபத்தில் வராது. மேலும் இது சில ஊட்டச்சத்து குறைபாடு காரணமாகவும் வரலாம்.

எனவே உணவில் அனைத்து நிறக் காய்கறிகள், பழங்களையும் சேர்த்துக்கொள்ள வேண்டும். சருமத்தை ஆரோக்கியமாகப் பராமரிக்க வைட்டமின் சி முக்கியம். எனவே ஆரஞ்சு , எலுமிச்சை ஆகியவற்றை உணவில் சேர்க்க வேண்டும். மேலும் தரமான கிரீம் உபயோகிப்பதால் சருமத்தில் அரிப்பு மற்றும் தழும்புகள் இல்லாமல் இருக்கும்.