மேகத்தின் மேலே உலவிய மர்ம உருவம் என்ன? வைரல் வீடியோ.. மெய்சிலிர்க்க வைக்கும் சம்பவம்.!



a Flight Passenger Record Some one Found Cloud 

விமான பயணங்களின் போது, புவியின் நிலப்பரப்பில் இருந்து புறப்படும் விமானம் மேகக்கூட்டங்களை கடந்து மேலே சென்று பறந்து தனது இலக்கை அடைகிறது. இவ்வாறான பயணத்தின்போது சாதாரண வானிலை நேரத்தில் பிரச்சனை இல்லை.

புயல், சூறைக்காற்று, சூறாவளி, கடல்கடந்த பயணத்தின்போது சில இடர்பாடுகளையும் எதிர்கொள்ள வாய்ப்புகள் அதிகம். அவ்வப்போது விமான பயணத்தில் மேகக்கூட்டங்களின் நடுவே செல்லும் வாய்ப்புகள் இருக்கும். 

வைரல் வீடியோ

திரைப்படங்களில் சொர்க்கம் காட்சிப்படுத்தப்படுவதுபோல, மேகக்கூட்டங்கள் நடுவே விமானம் பயணிக்கும். இவ்வாறான நிகழ்வு மெய் சிலிர்க்க வைக்கும். அந்த வகையில், சமீபத்தில் விமானத்தில் பயணம் செய்தவர் வீடியோ ஒன்றை எடுத்துள்ளார்.

இதையும் படிங்க: லூடோ ஆடலாம் வரியா.. திருமண மேடையில் விளையாட்டு; மணமகன் அட்ராசிட்டி அலப்பறை.!

மேகத்தில் ஏலியன்?

அப்போது, விமானத்தில் இருந்து பார்வை தூரத்தில் மர்மமான வகையில் 2 உருவம் நிற்பது போன்ற காட்சி பதிவு செய்யப்பட்டது. இந்த காட்சியை அவர் சமூக வலைத்தளத்தில் பதிவு செய்யவே, மேகத்தில் ஏலியன் நிக்கிறது என கதைகள் அளந்து விடப்பட்டுள்ளது. 

காற்றில் மேகத்தின் உருவம் 

இதுகுறித்து நிபுணர்கள் தெரிவிக்கையில், மேகக்கூட்டங்கள் இருக்கும்போது, அவை ஒருசில இடத்தில் காற்றின் உந்துதல், பிற காரணிகள் காரணமாக தனியே தெரியும். அவை சில நேரம் இவ்வாறான உருவம்போல தெரிகிறது என கூறினார்.

இதையும் படிங்க: எப்போதும் ஒரே வகை சட்னியை சாப்பிட்டு சலித்து விட்டதா?! இதை டிரை பன்னுங்க..அசத்தலா இருக்கும்.!