நாய்களிடம் ஜாக்கிரதை: ரூ.500 நோட்டை அக்கக்காக கிழித்து, அமைதியாக இருக்கும் வளர்ப்பு நாய்.!

நாய்களிடம் ஜாக்கிரதை: ரூ.500 நோட்டை அக்கக்காக கிழித்து, அமைதியாக இருக்கும் வளர்ப்பு நாய்.!


a Dog Bite 2 Notes of Rs 500 INR 

 

நமது வீடுகளில் இருக்கும் செல்லப்பிராணிகள் எப்போதும் நம்மிடம் குறும்புத்தனம் செய்பவை. நாம் சரியான நேரத்திற்கு உணவு வைக்கவில்லை என்றால், முதலில் அமைதியான குரலில் கேட்டுப்பார்த்து பின்னர் குரலை உயர்த்தும். 

எதற்கும் பலன் கிடைக்கவில்லை என்றால், உணவுப்பாத்திரங்களை நோக்கி நகரும். இன்னும் ஒருசில நாய்கள், தங்களுக்கு ஆத்திரம் வந்ததும் தன்னருகே இருக்கும் பொருட்களை வாயால் கடித்து இழுத்து சிறுசிறுதுண்டுகளாக மாற்றிவிடும். 

இந்நிலையில், வீட்டில் வளர்க்கப்படும் டிம்மிராஜ் என்ற நாயொன்று, உரிமையாளரின் ரூ.500 பணத்தை கடித்து குத்தறியுள்ளது. மொத்தமாக 2 நோட்டுகளை நாய் கடித்துள்ள நிலையில், அதனை வங்கிக்கு என்று சென்று மாற்றம் செய்ய கோரிக்கை வைத்திருகிறார். 

இதனைப்பார்த்த வங்கி ஊழியர்கள் பணம் இரண்டாக இருந்தால் மட்டுமே நாங்கள் மாற்றுவோம். நீங்கள் ஆர்.பி.ஐ வங்கிக்கிளைக்கு நேரில் செல்லுங்கள் என தெரிவித்துள்ளனர். இதனை அவர் முகநூலில் பதிவு செய்துள்ளார்.