#வீடியோ: ஒரே கிக்.. கூடையை சரியாக அடித்த சிறுவன்.. நீதாண்டா இந்திய கால்பந்து அணியோட எதிர்கால கேப்டன்.!



a Child Boy Kick Football it Exactly Touch basket Heading Upon Sister

கால்பந்தாட்டம், கிரிக்கெட், ஹாக்கி, கபாடி போன்ற பல்வேறு விளையாட்டுகள் சிறுவயதில் இருந்து நாம் விளையாடிய ஒன்றாக இருக்கும். பள்ளியில் படிக்கும் நேரத்தில் PET நேரம் வந்ததும், கிடைக்கும் நேரத்தில் ஒவ்வொருவரும் தங்களுக்கு பிடித்த விளையாட்டை விளையாடுவோம். 

இளம் வயது, துடிப்பான வேகம், நண்பர்களின் ஆரவாரம் என அவ்வயதில் நாம் சில பராக்கிரம சாதனைகளையும் செய்திருப்போம். சில நேரத்தில் அவை பெரும் விபரீதத்தில் முடிந்து காயமும் பட்டிருப்போம். 

இந்த நிலையில், சிறுவன் ஒருவன் தனது சகோதரியின் தலையில் வைக்கப்பட்டுள்ள கூடையை கால்பந்து மூலமாக சரியாக அடித்து தள்ளிவிடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதுகுறித்த பதிவை செய்துள்ளனர், " நாளைய இந்திய கால்பந்து அணியின் கேப்டன்.. எங்கிருந்தாலும் சிறுவனை தேடி ட்ரைனிங் கொடுங்கள்" என்று தெரிவித்துள்ளார்.