பலாத்காரம் செய்ய கடத்தப்பட்ட பெண்ணை காப்பாற்றிய 3 நண்பர்கள்! ரியல் ஹீரோக்களுக்கு குவியும் பாராட்டு3-local-heroes-rescued-a-girl-from-auto-driver

கொல்கத்தாவில் ஆட்டோ டிரைவரால் பாலியல் பலாத்காரம் செய்வதற்காக கடத்தப்பட்ட 28 வயது பெண்ணை அந்த வழியே சென்ற நண்பர்கள் 3 பேர் காப்பாற்றியுள்ளனர். இவர்களின் இந்த வீரதீர செயலுக்கு பாராட்டுகள் குவிகின்றன.

கொல்கத்தாவைச் சேர்ந்த அஜய் நஸ்கர், ஜலால் அலி மற்றும் சாபித் அலி ஆகிய மூவரும் நெருங்கிய நண்பர்கள். இந்த மூவரும் எப்பொழுதும் போல் கொல்கத்தாவில் நியூ டவுன் பகுதியில் மாலை நேரத்தை கழிப்பதற்காக வெளியில் சென்று ஒரு கடையில் தேநீர் அருந்தியுள்ளனர். அவர்கள் சற்று கவனக்குறைவாக இருந்திருந்தால் நிச்சயம் ஆட்டோவில் இருந்த அந்தப் பெண்ணின் முனகல் சத்தத்தை கேட்டிருக்க முடியாது. 

3 local heroes rescued a girl from auto driver

அப்போது சாலையில் அவர்களை கடந்து சென்ற ஆட்டோவில் பெண்ணின் அழுகுரல் வருவதை அவர்கள் கேட்டுள்ளனர். ஆட்டோவை சற்று உற்று நோக்கியத்தில்  28 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் ஆட்டோ டிரைவரால் வலுக்கட்டாயமாக அடைக்கப்பட்டு கடத்தி செல்லப்படுவதை அவர்கள் உணர்ந்துகொண்டனர்.

அதனைத் தொடர்ந்து நண்பர்களில் ஒருவரான நஸ்கர் சிறிது தூரம் ஆட்டோவை பின்தொடர்ந்து ஆட்டோ எங்கே செல்கின்றது என்பதை கண்காணித்தார். அந்த ஆட்டோவானது அருகிலுள்ள ஒரு வயலின் கடைசி பகுதிக்கு சென்று கொண்டிருந்தது. ஆள் நடமாட்டம் இல்லாத அந்த இடம் மிகவும் இருள் சூழ்ந்து காணப்பட்டது. அந்தப் பெண்ணின் அழுகுரல் உதவிக்காக யாரையோ கூப்பிடுவது போன்ற சந்தேகத்தை அவருக்கு உண்டாக்கியுள்ளது. அதனைத் தொடர்ந்து கடையில் தேநீர் அருந்திக் கொண்டிருந்த தனது நண்பர்களிடம் வந்து இதைப்பற்றி விவாதித்துள்ளார்.

3 local heroes rescued a girl from auto driver

அப்போது நண்பர்களில் ஒருவர் அது பெண்ணின் குரல் அல்ல ஏதோ குள்ளநரியும் அலறல் சத்தம் எனக் கூறியுள்ளார். ஆனால் நஸ்கர் அதனை விடுவது போல் இல்லை. ஆட்டோவை பின்தொடர்ந்து சென்று பார்த்துவிடலாம் என கூறியுள்ளார். அதனைத் தொடர்ந்து அந்த இடத்திற்கு சென்றடைந்த அந்த மூவரும் ஆட்டோ டிரைவரை பிடித்து அந்த பெண்ணை காப்பாற்றியுள்ளனர்.

ஆட்டோவில் இருந்த அந்தப் பெண் டிரைவரால் தாக்கப்பட்டு மிகவும் மோசமான நிலையில் இருந்துள்ளார். அந்தப் பெண் நடந்தவை அனைத்தையும் அந்த இளைஞர்களிடம் கூறவே அவர்கள் அருகில் இருந்த நியூ டவுன் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். அதனை தொடர்ந்து அங்கு வந்த காவல்துறையினர் ஆட்டோ டிரைவரை கைது செய்து அந்த பெண்ணை பாதுகாப்பாக அழைத்துச் சென்றனர். மேலும் இந்த சம்பவத்திற்கு அந்த மூன்று நண்பர்களும் சாட்சியம் கூற ஒப்புக்கொண்டனர். 

ஒரு பெண்ணின் உயிரை காப்பாற்றிய அந்த 3 நண்பர்களுக்கும் அந்த பகுதி மக்கள் பாராட்டுக்களை தெரிவித்தனர்.