காதலனுடன் மாலையும் கழுத்தமாய் நின்ற மனைவி..! நேரில் பார்த்து அதிர்ச்சியில் உறைந்த கணவர்..!



2nd-marriage-girl-no-inform-1st-husbend

திருமணமான சில மாதங்களிலேயே தனது கணவரை விட்டு பிரிந்து காதலனை திருமணம் செய்து கொண்ட பெண்ணால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே பொன்னேரி பகுதியை சேர்ந்தவர் சமிதா. இவருக்கும் சக்திவேல் என்பவருக்கும் கடந்த ஜூலை மாதத்தில் திருத்தணி கோவிலில் திருமணம் நடந்தது. அப்போது திருமணத்தில் புகைப்படம் எடுப்பது தொடர்பாக இரு வீட்டாருக்கும் இடையே ஒரு வாக்குவாதம் உருவாகியுள்ளது. நாளடைவில் அது சரியாகிவிட்டது.

இந்த நிலையில் இந்த பிரச்சினையை ஒரு காரணமாகக் காட்டி சக்திவேலின் வீட்டிலிருந்து வெளியேறி தனது தாயாருடைய வீட்டிற்கு சென்றுவிட்டார். சில நாட்களுக்குப் பிறகு சக்திவேல் தற்போது சமாதானமாகி இருப்பார் என்ற நம்பிக்கையில் அவரை காண சென்றுள்ளார். ஆனால் அவருக்கு சமிதா வீட்டில்  உரிய மரியாதை அளிக்காத நிலையில் மனவருத்தத்துடன் வீடு திரும்பியுள்ளார்.

Tamil Spark

இந்தநிலையில் மனக்கவலையோடு இருந்த சக்திவேல் திருவண்ணாமலை கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய சென்றுள்ளார். அங்கு அவருக்கு மேலும் ஒரு அதிர்ச்சி காத்திருந்தது அது என்னவென்றால் தனது மனைவி வேறு ஒருவருடன் புது தாலியுடன் காட்சியளித்தார் உடனே அவரிடம் சென்று பிரச்சினை செய்துள்ளார்.

இதுதொடர்பாக சக்திவேல் காவல்துறையிடம் புகார் தெரிவித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் மேற்கொண்ட விசாரணையில் சபிதா தான் படிக்கும் போதே அந்த பையனை காதலித்துள்ளார். 11ஆம் வகுப்பு படிக்கும் பொழுது அந்தப் பெண் கர்ப்பமாக இருந்துள்ளார்.  அதனால் அவளது பெற்றோர்கள் அதனை மறைத்து சக்திவேலுவுடன்  திருமணம் செய்து வைத்துள்ளனர் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.