உலகம் லைப் ஸ்டைல்

இரண்டு வருடத்தில் 20 முட்டை விட்ட விசித்திர சிறுவன்! குழப்பத்தில் மருத்துவர்கள்!

Summary:

14 years old indonesia boy putting egg for last two years

பொதுவாக பறவைகள் முட்டை இடுவது வழக்கமானது. ஆனால்  இந்தோனேஷியாவில் சிறுவன் ஒருவன் கோழியை போல் முட்டை விடுகிறான். இரண்டு ஆண்டுகளாக முட்டை இட்டு வரும் இந்த சிறுவன் இதுவரை 20 முட்டைகள் வரை விட்டுள்ளான்.
 
இந்தோனேஷியாவில் கோவா (Gowa) என்னும் பகுதியை சேர்ந்தவரான அக்மலுக்கு 14கு  வயதாகிறது.  கடந்த இரண்டு ஆண்டுகளாக அதாவது கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் இவர் முட்டை இடுவதாக இவரது பெற்றோர் இவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். 

இதை கேட்டு வியப்பான மருத்துவர்கள் இது நிச்சயம் சாத்தியம் இல்லை என தெரிவித்தனர். மேலும் மனிதனால் முட்டை இட முடியாது எனவும் தெரிவித்தனர். இருப்பினும் இது குறித்து தெளிவான புரிதல் இல்லாமல் சிறுவனுக்கு என்ன சிகிச்சை அளிப்பது என தெரியாமல் குழப்பத்தில் உள்ளனர் மருத்துவர்கள்.

இதுகுறித்து அவரது தந்தை பேசுகையில் எனது மகன் இதுவரை 20 முட்டைகள் விட்டுள்ளான். இரண்டு வருடங்களாக இதுபோன்று நடந்து வருகிறது. மருத்துவமனை சென்றாலும் மருத்துவர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் தவிக்கின்றனர் என கூறியுள்ளார். மேலும் தனது மகன் விட்ட முட்டைகளை உடைத்து பார்த்தால் உள்ளே மஞ்சள் கலரில் ஏதோ ஓன்று உள்ளது எனவும் அவரது தந்தை கூறியுள்ளார். மேலும் இது சம்மந்தமான புகைப்படம் ஒன்றும் வெளியாகியுள்ளது. 


Advertisement