இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் காலில் விழுந்து வணங்கிய பிரபல ராப் பாடகர்.! தீயாய் பரவும் வீடியோ.!

இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் காலில் விழுந்து வணங்கிய பிரபல ராப் பாடகர்.! தீயாய் பரவும் வீடியோ.!



yoyo-honeysingh-get-blessing-from-ar-rahman

அபுதாபியில் உள்ள யாஸ் ஐலேண்டில் அமைந்துள்ள எத்திஹாட் அரங்கத்தில் சர்வதேச இந்திய திரைப்பட அகாடமி விருதுகள் வழங்கும் விழா ஐஐஎஃப்ஏ   நடைபெறவுள்ளது. இந்த விருது விழாவை சல்மான் கான், மணீஷ் பால் மற்றும் ரித்தேஷ் தேஷ்முக் ஆகியோர் தொகுத்து வழங்குகின்றனர். 

மேலும் அந்த நிகழ்ச்சியில் ரன்வீர் சிங், சாரா அலி கான், கார்த்திக் ஆர்யன்,  வருண் தவான், அனன்யா பாண்டே, நோரா பதேஹி, திவ்யா கோஸ்லா குமார் உள்ளிட்ட பலரும் ஏராளமான கலைநிகழ்ச்சிகளில் பங்கேற்கவுள்ளனர். இந்நிலையில் இந்த விழாவிற்கான ரிகர்சல் நிகழ்ச்சி நடைப்பெற்றுள்ளது. அதில் பஞ்சாப்பை சேர்ந்த ராப் சிங்கரான யோயோ ஹனி சிங் மேடையில் பாடியுள்ளார். 

அப்பொழுது ஏ.ஆர் ரகுமான் பார்வையாளர்கள் வரிசையில் கீழே அமர்ந்துள்ளார். இந்நிலையில் கீழே இறங்கி நடந்து வந்த ஹனி சிங், திடீரென ஏ.ஆர் ரகுமானின் காலில் விழுந்து வணங்கியுள்ளார். பின் அவரை வாழ்த்திய ஏ.ஆர்.ரகுமான் பின் அவருக்கு கைகொடுத்து ஸ்மைல் செய்துள்ளார். இந்த வீடியோவை ஹனிசிங் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட நிலையில் அது வைரலாகி வருகிறது.