இந்தியா

பெற்றோர் வாங்கி கொடுத்த BMW கார் பிடிக்காததால் இளைஞர் செய்த அதிர்ச்சி காரியம்!

Summary:

Youth Pushes Luxury BMW in River after father denies New Jaguar Car Request

ஹரியானா மாநிலம் யமுனா நகரை சேர்ந்த இளைஞர் ஒருவர் தனது பெற்றோரிடம் தனக்கு ஜாகுவார் எனும் விலை உயர்ந்த காரை வாங்கி தருமாறு கேட்டுள்ளார். அதற்கு அவரது பெற்றோர் ஜாகுவார் கார் வாங்கி தராமல் அதற்கு இணையான மற்றொரு ஆடம்பர காரண BMW காரை வாங்கி தங்கள் மகனுக்கு பரிசாக கொடுத்துள்னனர்.

ஆனால் தான் கேட்ட காரை வாங்கி தராமல் வேறொரு காரை பெற்றோர் வாங்கி கொடுத்ததால் அந்த காரை ஆற்றில் தள்ளியுள்ளார் அந்த வாலிபர். ஆற்றில் தள்ளியதோடு மட்டும் இல்லாமல் இது விபத்து இல்லை என்றும், தனக்கு இந்த கார் பிடிக்காததால் ஆற்றில் தள்ளியதாகவும் தெரிவித்துள்ளார்.

இதனை கேள்வி பட அவரது பெற்றோர் உடனே தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்து காரையும் அதில் இருந்த இளைஞரையும் மீட்டுள்னனர். இந்த சம்பவம் வீடியோவாக வெளியாகி வைரலாகிவருகிறது. இதோ அந்த வீடியோ.


Advertisement