நடுரோட்டில் அரைகுறை ஆடையுடன் நடனமாடிய இளம்பெண்.! வாயடைத்துப்போன வாகன ஓட்டிகள்.! வைரல் வீடியோ .!

நடுரோட்டில் அரைகுறை ஆடையுடன் நடனமாடிய இளம்பெண்.! வாயடைத்துப்போன வாகன ஓட்டிகள்.! வைரல் வீடியோ .!



young women dance in road

அரைகுறை ஆடையுடன் நடுரோட்டில் நடனமாடிய இளம்பெண்ணின் வீடியோ வைரலானதால், அவர் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

சமீபத்தில் அதாவது டிக்டாக் செயலிக்கு இந்தியாவில் தடை செய்யப்பட்டதற்கு முன்பு பலரும் வில்லங்கமான வீடியோக்களை பதிவிட்டு வந்தனர். லைக்ஸுகளை குவிப்பதற்க்காக டிக்டாக்கில் வித்தியாசமான வீடியோக்களை போடுவதற்காக முயற்சி செய்து பலர் உயிரை விட்ட சம்பவமும் இந்தியாவில் நிகழ்ந்தது. 

இதனையடுத்து டிக்டாக் செயலிக்கு இந்தியாவில் தடை செய்யப்பட்ட பிறகு, அதைப் போலவே பல்வேறு செயலிகள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. தற்போது டிக்டாக்கிற்கு இணையாக இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் என்ற புதிய வசதி கொண்டு வரப்பட்டுள்ளது. அதில் பெரும்பாலானோர் பாடல்களுக்கு நடனமாடி வீடியோக்களை பதிவு செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், மத்திய பிரதேச மாநிலம் இந்தூர் பகுதியில், சிக்னலில் இளம்பெண் ஒருவர் நடனமாகும் காட்சி வேகமாக பரவி வருகிறது. அவர் சிக்னலில் வாகனங்கள் நின்று கொண்டிருக்கும் போது, அரை குறை ஆடையுடன், நீண்ட நேரம் நடனமாடியுள்ளார். போக்குவரத்து சிக்னலில் பச்சை விளக்கு எரிந்தபிறகும் அவரை வாகன ஓட்டுநர்கள் வியப்புடன் பார்த்து சென்றனர். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

அவர் பெயர் ஸ்ரேயா கல்ரா என்றும் அவர் மாடல் என்பது தெரிய வந்துள்ளது. போக்குவரத்து விதிகளை மதிக்காததால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்திற்கு பிறகு ஸ்ரேயா கல்ரா தான், போக்குவரத்து விதிகளை மீறும் நோக்கத்தில் இதை எடுக்கவில்லை என்றும் முகமூடி அணிவது மற்றும் சிவப்பு விளக்கில் வாகனங்களை நிறுத்தி வைப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த மட்டுமே இதை செய்ததாக தெரிவித்துள்ளார்.