பெண்கள் பயிலும் பள்ளியில் இளைஞர் சென்று செய்த செயல்!. பல மாணவிகள் மருத்துவமனையில் அனுமதி!.young man wrong behaviour in girls school

 

பீகார் மாநிலம், திரிவேணிகஞ்ச் பகுதி அருகே ஹாஸ்டலுடன் கூடிய கஸ்தூரிபா காந்தி பெண்கள் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 12 முதல் 15 வயதுள்ள மாணவிகள் பயின்று வருகின்றனர்.

அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் சிலர் பள்ளிக்கு செல்லும் மாணவிகளிடம், மாடியிலிருந்து ஆபாசமாக நடந்து கொண்டதாக கூறப்படுகிறது. இதனால் எரிச்சலடைந்த மாணவிகள் பள்ளி நிர்வாகத்திடம் முறையிட்டுள்ளனர்.

இந்த நிலையில் மோகன் என்ற இளைஞர் பள்ளி சுவற்றில் ஆபாசமான வார்த்தைகளை எழுதியுள்ளார். இதனை பாத்து ஆத்திரமடைந்த மாணவிகள் அந்த இளைஞரை திட்டி அனுப்பியுள்ளனர்.

வேகமாக வீட்டிற்கு சென்ற அந்த இளைஞர் தன்னுடைய அம்மா மற்றும் ஏராளமானோரை அழைத்து வந்து, பள்ளியில் அத்துமீறி நுழைந்து ஆசிரியை மற்றும் மாணவிகளை சரமாரியாக தாக்கியுள்ளனர். சத்தம் கேட்டு வந்து பார்த்த பக்கத்து வீட்டார் ஒருவர் உடனடியாக காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளார்.

ஆனால் காவல்துறையினர் வருவதற்குள் அங்கு பலத்த தாக்குதல் ஏற்பட்டு, காயமடைந்த 34 பேரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர் காவல்துறையினர்.

இந்த சம்பவத்தில் 100க்கும் மேற்பட்டவர்கள் ஈடுபட்டிருக்கும் நிலையில், இதுவரை 8 பேர் மீது மட்டுமே காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர் கூறப்படுகிறது.

இந்த நிலையில் மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் இந்த சம்பவம் சமூகவலைத்தளங்களில் பாகி\ரப்பட்டு வருகிறது.