ஓடும் ரயிலில் தொங்கியபடி இளைஞர் செய்த காரியம்! அடுத்த கணமே நேர்ந்த விபரீதம்! திடுக்கிடும் வீடியோ இதோ!

ஓடும் ரயிலில் தொங்கியபடி இளைஞர் செய்த காரியம்! அடுத்த கணமே நேர்ந்த விபரீதம்! திடுக்கிடும் வீடியோ இதோ!


YOUNG MAN STUNT IN TRAIN AT MUMBAI

நாளுக்கு நாள் சாகசம் என்கிற பெயரில் இளைஞர்கள் உயிரிழப்பு அதிகரித்து வருகிறது. இளைஞர்கள் ஏதாவது வித்தியாசமாக சாகசம் செய்யவேண்டும், அனைவரின் கவனத்தையும் ஈர்க்க வேண்டும் என செய்யும் செயல்கள் உயிரிழப்பு வரை ஆபத்தை ஏற்படுத்துகிறது. 

மேலும் சமீபகாலமாக இதனால் ஏற்படும் விபத்துகள் அதிகரித்துள்ளது. இந்நிலையில் சமீபத்தில் இளைஞர் ஒருவர் ரயிலில் வெளியே படிகளில் தொங்கியபடி சாகசம் செய்துள்ளார்.மேலும் இதனை அவரது நண்பர் உள்ள இருந்தவாறு வீடியோ எடுத்துள்ளார். 

இந்நிலையில் திடீரென எதிர்பாராத விதமாக அந்த இளைஞர் கம்பத்தில் மோதி சிதறி ரயிலுக்குள் விழுந்துள்ளார். இதனை தொடர்ந்து தற்போது அந்த இளைஞர் பெயர் தில்ஷன் என்பதும் 26 வயது நிறைந்த அவர் உயிரிழந்து விட்டார் என்பதையும் ரயில்வே அமைச்சகம் உறுதி செய்துள்ளது.

 மேலும் இதுகுறித்து தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில்,  ரயிலில் சாகசம் எதுவும் செய்ய வேண்டாம். இது சட்டவிரோதமானது மற்றும் மிகவும் ஆபத்தானது. மும்பையில் வில்சன் என்ற இளைஞர் சாகசத்தில் ஈடுபட்ட போது உயிரிழந்துள்ளார். உங்கள் பாதுகாப்பை பொருட்படுத்தாமல் ரயிலிலிருந்து வெளியே வருவது,  ரயிலில் ஏறுவது போன்றவை விபத்து என கூறப்படும் என தெரிவித்துள்ளது. மேலும் இது குறித்த வீடியோவையும் வெளியிட்டுள்ளது.