இந்தியா

பைக் திருடியதாக கொடூரமாக அடித்து கொல்லப்பட்ட இளைஞன்.! மனைவி விடுத்த எச்சரிக்கையால் ஆடிப்போன போலீசார்!!

Summary:

young man attacked and killed as thinking theif

ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியை சேர்ந்தவர் அன்சாரி. இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனது நண்பர்களுடன் சென்றுள்ளார். அப்பொழுது அப்பகுதியை சேர்ந்த ஒரு கும்பல் அன்சாரியை இருசக்கர வாகனத்தை திருடியதாக கூறி பிடித்து மரத்தில் கட்டியுள்ளனர். மேலும் அவரை 7 மணி நேரம் கொடூரமாக தாக்கியுள்ளனர். ஆத்மட்டுமின்றி அந்த இளைஞரை ஜெய் ஸ்ரீ ராம் என கூறும்படி வற்புறுத்தியுள்ளனர். இவ்வாறு படுகாயங்களுடன் அன்சாரி தாக்கப்பட்ட வீடியோ சமூகவலைதளத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் இதுகுறித்து போலீசாருக்கு தகவலிக்கப்பட்டநிலையில், அன்சாரி  படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் பெரும்  அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் அன்சாரி பைக் திருடவில்லை என அவரது குடும்பத்தார்கள், கொடூரமாக கொலை செய்த அந்த கும்பல் மீது புகார் அளித்த நிலையில் போலீசார் அந்த தாக்குதலில் சம்மந்தப்பட்ட சிலரை கைது செய்தனர். பின்னர் அவர்களை விடுவித்தனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த அன்சாரியின் மனைவி சைஸ்டா பர்வீன் சமீபத்தில் மிகவும் வேதனையுடன் பேட்டி அளித்துள்ளார். அப்பொழுது அவர் என் கணவர் எப்படி இறந்தார் என உலகத்துகே தெரியும், எந்த தவறும் செய்யாத என் கணவரை கொடூரமாக தாக்கி கொலை செய்தவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை தூக்கில் போட வேண்டும். இதை போலீசார் செய்யவில்லை எனில் நான் தற்கொலை செய்து கொள்வேன். இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும்என கூறியுள்ளார். இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 


Advertisement