இந்தியா வீடியோ

விதிகளை மீறி நடுரோட்டில் சென்ற பேருந்து.! ஒற்றைஆளாக, தில்லாக இளம்பெண் செய்த காரியம்!! தீயாய் பரவும் வீடியோ!

Summary:

young girl teach bus to opey the rule

தற்போது நாளுக்கு நாள் சாலை விதிகள் குறித்த விழிப்புணர்வு அதிகரித்து வந்தாலும்,  சிலர்  அதனை பின்பற்றுவதில்லை. இதனாலேயே நாளுக்கு நாள் சாலைகளில் விபத்துகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது.மேலும்  இவ்வாறு அசால்டான நபர்கள் பலர் இருக்கும் நிலையிலும் சில நபர்கள்  சாலை விதிகளை பின்பற்றுவதை முக்கிய குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வருகின்றனர். 

 இவ்வாறு கேரளாவில் பேருந்து ஒன்று சாலையில் தவறான பாதையில் அதாவது இடது புறம் வராமல் வலது புறம் வந்து கொண்டிருந்தது. இந்நிலையில் எதிர்திசையில் இருசக்கர வாகனத்தில் வந்த இளம்பெண் ஒருவர் அந்த பேருந்து டிரைவருக்கு சரியான பாடம் கற்பிக்க எண்ணி அவருக்கு வழி விடாமல் அப்படியே நடுரோட்டில் நின்றுள்ளார்.

TRAFFIC IN ROAD க்கான பட முடிவு

இதனை தொடர்ந்து தான் செய்த தவறை புரிந்து கொண்ட பேருந்தின் ஓட்டுனர் சிறிது சுதாரித்துக் கொண்டு ஒதுங்கி சரியான நேர்வழியில் பேருந்தை இயக்கி உள்ளார். அதனை தொடர்ந்து அப்பெண் அவ்விடத்தை விட்டு நகர்ந்து சென்றுள்ளார். இவ்வாறு சிறு வாகனங்கள் மட்டுமின்றி பேருந்துகள் கூட இவ்வாறு சாலை விதிகளை பின்பற்றாமல் செய்வதாலேயே பெரிய அளவிலான விபத்துக்கள் ஏற்படுகிறது.

 இந்நிலையில் மிகவும் தைரியமாக அந்த இளம்பெண் செய்த காரியத்திற்கு பலரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் அவரை அனைவரும் புகழ்ந்து தள்ளி வருகின்றனர்.


Advertisement