இந்தியா

25 வயசு மென் பொறியாளர் சரண்யா..! குடிகார புருஷன்..! திருமணம் முடிந்து ஒரே ஆண்டில் நேர்ந்த துயரம்..! கதறித் துடிக்கும் பெற்றோர்..!

தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படும் தங்கள் மகளின் மரணத்தில் சந்தேம் இருப்பதாக உயிரிழந்த பெண்ணின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர்.

தெலுங்கானா மாநிலம் கம்மாரெட்டி  பகுதியை சேர்ந்தவர் 25 வயதான சரண்யா. இவர் பெங்களூருவில் உள்ள பிரபல ஐடி நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்துவந்தநிலையில் தனது பள்ளி தோழன் ரோஹித் என்பவரை காதலித்து கடந்த ஆண்டு பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துள்ளார்.

திருமணம் முடிந்து கணவன் மனைவி இருவரும் பெங்களூரில் உள்ள மடிவாளா அருகே வெங்கடபுரா என்னும் பகுதியில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக தனது கணவர் அடிக்கடி குடித்துவிட்டு வீட்டிற்கு வருவதாகவும், தன்னை அடித்து கொடுமை படுத்துவதாகவும் சரண்யா அவரது பெற்றோரிடம் கூறி அழுதுள்ளார்.

சரண்யாவின் பெற்றோரும் தங்கள் மகளை சமாதானப்படுத்தியுள்ளனர். இந்நிலையில் சரண்யா தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டதாக சரண்யாவின் பெற்றோர் மற்றும் மடிவாளா போலீசாருக்கும் ரோஹித் தகவல் கொடுத்துள்ளார். இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் சரண்யாவின் உடலை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.

இதனிடையே தங்கள் மகள் தற்கொலை செய்துகொள்ளவில்லை எனவும், ரோஹித்தான் அவரை கொலை செய்து தூக்கில் தொங்கவிட்டு தற்கொலை நாடகம் ஆடுவதாகவும், தங்கள் மகள் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் மடிவாளா போலீசில் புகார் அளித்துள்ளனர். புகாரின் அடிப்படையில்  வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் ரோகித்திடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Advertisement