புஷ்பா 2 எப்படி? புளூ சட்டை மாறன் விமர்சனம் இதோ.. பாராட்டு., பன்ச்.. என்டில் ட்விஸ்ட்.!
விபத்தில் இரண்டு கைகளையும் இழந்த இளம் பெண்..! ஆணின் கைகளை பொருத்திய மருத்துவர்கள்.! ஆனால் எதிர்பாராமல் நிகழ்ந்த அற்புதம்!
விபத்தில் தனது இரண்டு கைகளையும் இழந்த இளம் பெண் ஒருவருக்கு ஆண் ஒருவரின் கைகள் பொருத்தப்பட்டு, அதன் பின்னர் நடந்த அதிசய சம்பவம் அனைவர் மத்தியிலும் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலத்தை சேர்ந்த சித்தனாகவுடர் என்ற 18 வயது இளம் பெண் ஒருவர் சமீபத்தில் நடந்த பேருந்து விபத்து ஒன்றில் சிக்கி தனது இரண்டு கைகளையும் இழந்தார். இரண்டு கைகளையும் இழந்த சித்தனாகவுடர் தனது அன்றாட வேலைகளை செய்யத்தில் மிகவும் சிரமப்படுவந்துள்ளார்.
தங்கள் மக்களுக்கு உறுப்பு தானம் செய்யக்கூறி அவரது பெற்றோர் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனர். ஆனாலும், அவருக்கு கைகள் கிடைக்கவில்லை. இந்நிலையில், இறந்துபோன ஆண் ஒருவரின் கைகளை தனமாக வழங்க அவரது குடும்பத்தினர் முன்வந்துள்ளனர்.
ஆனால், தானம் கொடுப்பவரின் கைகள் மிகவும் பெரிதாக, முரட்டு தனமாகவும், கைகள் நிறைய முடியுடனும் இருந்துள்ளது. இதனை எப்படி ஒரு பெண்ணுக்கு பொருத்துவது என மருத்துவர்கள் யோசிக்க, தனக்கு கை மிகவும் அவசியம் என கூறி, அந்த கைகளை இன்முகத்துடன் ஏற்றுக்கொண்டார் சித்தனாகவுடர்.
இதனை அடுத்து 13 மணி நேரம் நடந்த தீவிர அறுவை சிகிச்சைக்கு பிறகு இரண்டு கைகளும் சித்தனாவுக்கு வெற்றிகரமாக பொருத்தப்பட்டது. அறுவை சிகிச்சை முடிந்த சில மாதங்களிலையே தனது வேலைகளை தானே செய்ய தொடங்கினார் சித்தானா. அப்போதுதான் அந்த அதிசயமும் நிகழந்துள்ளது.
தானம் பெற்ற ஆணின் கைகள் சித்தனாவின் உடல் நிறத்துக்கு மாறியதோடு, கைகளில் இருந்த முடிகள் உதிர்ந்து, முரட்டு தனமும் படிப்படியாக குறைந்து மென்மையாக மாறியுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த சித்தனாவின் குடும்பத்தினர் மருத்துவர்களை அணுக, இதுபோன்று நடப்பது மிகவும் அரிதான ஓன்று எனவும், தங்கள் அறுவை சிகிச்சை முழுவது வெற்றியடைந்தது மகிழ்ச்சியளிப்பதாக தெரிவித்துள்ளனர்.