இந்தியா

கணவர் உயிரிழந்த நிலையில், மாமனாரை திருமணம் செய்துகொண்ட இளம்பெண்! இதுதான் காரணமா? வெளியான ஆச்சர்ய சம்பவம்!

Summary:

Young girl. Got marriage with father in law

சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூர்  பகுதியைச் சேர்ந்தவர் ஆர்த்தி சிங். 21 வயது நிறைந்த இவரது கணவர் கவுதம் சிங்.  அவர் கடந்த இரு வருடங்களுக்கு முன்பு எதிர்பாராதவிதமாக உயிரிழந்தார். அதனைத் தொடர்ந்து தனிமையில் வாழ்ந்து வந்த ஆர்த்தி ஏராளமான துயரங்களையும், இன்னல்களையும் அனுபவித்து வந்துள்ளார். 

இந்த சூழ்நிலையில் அவரது மாமனார் கிருஷ்ணா ராஜ்புத் சிங்கே அவருக்கு உறுதுணையாக இருந்து வந்துள்ளார். மேலும் மருமகளை மிகவும் அன்புடனும், கனிவாகவும் கவனித்து வந்துள்ளார். அதனைத் தொடர்ந்து ஆர்த்தி சிங்கை அவரது மாமனாருக்கே திருமணம் செய்து வைக்கலாம் என முடிவு செய்யப்பட்ட நிலையில், ஆர்த்தி சிங்கும் அதற்கு சம்மதம் தெரிவித்துள்ளார். 

மேலும் கணவர் இறந்து இரு வருடங்கள் ஆனதால், ஆர்த்திசிங்கின் மறுமணத்திற்கு அவர்களது சாதிய அமைப்பும் சம்மதம் தெரிவித்தது. அதனைத்தொடர்ந்து கொரோனாவால்  ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருப்பதால் அரசின் வழிமுறைகளுக்கு உட்பட்டு திருமணதிற்கான அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு,  ராஜ்பூத் க்ஷத்ரிய மகாசபாவின் குழு அமைப்பின் முன்னிலையில் இருவருக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது.


Advertisement