வீடியோ காலில் காதலனுடன் விளையாட்டு! பரிதாபமாக உயிரிழந்த காதலி! விசாரணையில் அதிர்ச்சி தகவல்!

வீடியோ காலில் காதலனுடன் விளையாட்டு! பரிதாபமாக உயிரிழந்த காதலி! விசாரணையில் அதிர்ச்சி தகவல்!


young girl died while talk with lover

 கேரளாவில் இளம்பெண்ணும் அவரது காதலனும் செல்போனில் வீடியோ காலில் பேசிக் கொண்டிருந்தபோது தற்கொலை செய்துக் கொள்ளப் போவதாக இளம்பெண் காதலனுக்கு விளையாட்டாக மிரட்டல் விடுத்தப் போது பரிதமாக உயிரிழந்துள்ளார்.

கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்தில் கூலி தொழிலாளியின் மகள் வீட்டில் யாரும் இல்லாதப் போது தூக்கு போட்டு தற்கொலை செய்துக் கொண்டார். இதனை பார்த்த அவரது அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். 

young girl

இந்நிலையில் அவரது தற்கொலையில் சந்தேகம் இருப்பதாக உயிரிழந்த இளம்பெண்ணின் பெற்றோர் காவல்துறையில் புகார் அளித்தனர். இதனையடுத்து இளம்பெண்ணின்  காதலனை வரவழைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அதிர்ச்சி தகவல் வெளியானது.

சம்பவத்தன்று இளம்பெண்ணும் அவரது காதலனும் செல்போனில் வீடியோ காலில் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது ஏற்பட்ட தகராறில் தான் தற்கொலை செய்துக் கொள்ளப் போவதாக இளம்பெண் காதலனுக்கு மிரட்டல் விடுத்துள்ளார். கயிறு கட்டி விளையாட்டாக மிரட்டல் விடுத்தப் போது எதிர்பாராத விதமாக கழுத்தில் மாட்டியிருந்த கயிறு இறுகி இளம்பெண்  உயிரிழந்தது தெரியவந்தது.