ஒரு தடவடா..! ப்ளீஸ் டா..! கெஞ்சிய காதலி..! கண்டுகொள்ளாத காதலன்..! லைவ் வீடியோவிலையே நடந்த கொடூரம்..!Young girl commit suicide for lover refused to speak with her

காதலன் பேச மறுத்ததால் மனமுடைந்த காதலி, காதலனுக்கு செல்பி வீடியோ ஒன்றை அனுப்பிவிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் நெல்லூர் பகுதியை சேர்ந்தவர் ரம்யா. இவர் அதே பகுதியில் உள்ள கல்லூரி ஒன்றில் இரண்டாம் ஆண்டு படித்துவந்துள்ளார். இந்நிலையில் ரம்யாவுக்கும், அதே பகுதியை சேர்ந்த சிவபார்கவ் என்னும் இளைஞருக்கும் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் காதலாக மாற, இருவரும் சமீபகாலமாக காதலித்துவந்துள்ளனர்.

இந்நிலையில் சிவபார்கவ் திடீரென ரம்யாவுடன் பேசுவதை நிறுத்தியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த ரம்யா தனது காதலனுடன் பேச பலமுறை முயற்சி செய்துள்ளார். ஆனாலும் சிவபார்கவ் ரம்யாவிடம் பேசவில்லை, ரம்யா பலமுறை கெஞ்சி நண்பர்கள் மூலம் தூதுவிட்டு பார்த்துள்ளார், அப்போதும் சிவபார்கவ் ரம்யாவிடம் பேசுவதாக இல்லை.

இதனால் மனமுடைந்த ரம்யா, தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்துள்ளார். இதனை அடுத்து, அறைக்குள் சென்ற ரம்யா துப்பட்டாவை கொக்கியில் மாட்டி அதை விதியோவாக பதிவு செய்து, தன்னிடம் பேசுமாறு கெஞ்சி தனது காதலனுக்கு அனுப்பியுள்ளார்.

ஆனால் அவரிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை. இதனால் மேலும் மனமுடைந்த ரம்யா லைவ் வீடியோவிலேயே தற்கொலை செய்து கொண்டார். இதனை அடுத்து ரம்யா நீண்ட நேரமாக அறையில் இருந்து வெளியே வராத நிலையில் பெற்றோர் கதவை தட்டிப்பார்த்தனர். ஆனால் பதில் வரவில்லை.

இதனால் சந்தேகமடைந்த அவர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது ரம்யா தூக்கில் சடலமாக தொங்கியுள்ளார். உடனே இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டநிலையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ரம்யாவின் உடலை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் ரம்யாவின் காதலனை கைது செய்துள்ள போலீசார் அவரிடம் விசாரணை நடத்திவருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.